MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • அஷ்வின் சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா.. முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

அஷ்வின் சுழலில் சுருண்டது ஆஸ்திரேலியா.. முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

2 Min read
Author : karthikeyan V
Published : Feb 11 2023, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடந்தது. கடந்த 9ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் டாட் மர்ஃபி என்ற 22 வயது இளம் ஸ்பின்னர் அறிமுகமானார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் அறிமுகமானார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.
 

38

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி, ஸ்காட் போலந்த்.

48

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியை ஜடேஜாவும் அஷ்வினும் சேர்ந்து 177 ரன்களுக்கு சுருட்டிவிட்டனர். ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்த அந்த அனி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. லபுஷேன் அதிகபட்சமாக 49 ரன்கள் அடித்தார். ஸ்மித் 37 ரன்கள் அடித்தார்.
 

58

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிவருகிறது. ராகுல் (20), புஜாரா(7), கோலி(12), சூர்யகுமார் யாதவ்(8), கேஎஸ் பரத் (8) ஆகியோர் சரியாக ஆடவில்லை. ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து 120 ரன்களை குவித்தார். 
 

68

ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் அடித்திருந்தது. ஜடேஜா 66 ரன்களுடனும் அக்ஸர் படேல் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 70 ரன்களுக்கு ஜடேஜா ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அக்ஸர் படேலுடன் ஜோடி சேர்ந்த முகமது ஷமி அடித்து ஆடி 47 பந்தில் 37 ரன்களை விளாச, 9வது விக்கெட்டுக்கு இந்திய அணிக்கு 52 ரன்கள் கிடைத்தது. அக்ஸர் படேல் 84 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது இந்திய அணி.

78
Image credit: PTI

Image credit: PTI

223 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி அஷ்வின் சுழலில் மண்டியிட்டு சரணடைந்தது. உஸ்மான் கவாஜா(5), டேவிட் வார்னர்(10), மேட் ரென்ஷா (2), ஹேண்ட்ஸ்கோம்ப்(6) மற்றும் அலெக்ஸ் கேரி(10) ஆகிய 5 வீரர்களையும் அஷ்வின் வீழ்த்த, மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி. 
 

88

இந்திய அணி சார்பில் 2வது இன்னிங்ஸில் அஷ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் ஷமி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.

About the Author

KV
karthikeyan V
இந்திய கிரிக்கெட் அணி
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரோகித் சர்மா

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026-க்கு பிறகு குட்பை சொல்லும் 5 ஸ்டார் வீரர்கள்! அட! மிஸ்டரி ஸ்பின்னரும் இருக்காரா?
Recommended image2
Ishan Kishan: "வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்
Recommended image3
CSK Playoffs 2026: SRH-யிடம் தோல்வி... CSK-க்கு ப்ளேஆஃப் வாய்ப்பு இருக்கா? கணக்குகள் சொல்வதென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved