MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND W vs AUS W: டூ-ஆர்-டை போட்டியில் ஆஸ்திரேலியாவை கதறவிட்ட ஹர்மன்பிரீத் கவுர்! மெகா சாதனை!

IND W vs AUS W: டூ-ஆர்-டை போட்டியில் ஆஸ்திரேலியாவை கதறவிட்ட ஹர்மன்பிரீத் கவுர்! மெகா சாதனை!

IND W vs AUS W: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வாழ்வா? சாவா? போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசிய ஹர்மன்பிரீத் கவுர் மெகா சாதனை படைத்தார்.

1 Min read
Author : Rayar A
Published : Jun 28 2026, 09:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
மகளிர் டி20 உலகக்கோப்பை; இந்தியா, ஆஸ்திரேலியா போட்டி
Image Credit : x

மகளிர் டி20 உலகக்கோப்பை; இந்தியா, ஆஸ்திரேலியா போட்டி

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய முக்கியமான போட்டியில் இந்திய மகளிர் அணியும், ஆஸ்திரேலியா மகளிர் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. ஓப்பனிங்கில் களமிறங்கிய ஸ்டார் வீரர் ஸ்மிருதி மந்தனாவும், மூத்த வீரர் ஷெபாலி வர்மாவும் முதல் விக்கெட்டுக்கு 9 ஒவரில் 66 ரன்கள் சேர்த்தனர்.

ஷெபாலி வர்மா அதிரடி

அதிரடியாக விளையாடிய ஷெபாலி வர்மா 26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுபக்கம் நிதானமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 37 பந்தில் 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், ஜெமிமா ரோட்ரிக்சும் அணியை மீட்டனர். ஜெமிமா டெஸ்ட் மேட்ச் போல பொறுமையாக விளையாட ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியில் பட்டைய கிளப்பினார். சிக்சரும், பவுண்டரியுமாக நொறுக்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
ஆஸ்திரேலியாவை அலற விட்ட ஹர்மன்பிரீத் கவுர்
Image Credit : x

ஆஸ்திரேலியாவை அலற விட்ட ஹர்மன்பிரீத் கவுர்

தடுமாற்றத்துடன் நிதானமாக விளையாடிய ஜெமிமா 28 பந்தில் 34 ரன்கள் அடித்து ரிட்டையர் ஹர்ட் ஆனார். மறுபக்கம் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியில் வெளுத்துக்கட்டினார். குறிப்பாக கடைசி ஓவரில் அவர் மோலினக்ஸ் ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி அவுட் ஆனார். ஹர்மன்பிரீத் வெறும் 27 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 56 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சோஃபி மோலினக்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியாவுக்கு இது வாழ்வா? சாவா? போட்டி

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. மகளிர் டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா வங்கதேசத்தை வீழ்த்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் உலகக் கோப்பை பயணத்தில் இந்தப் போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டியில் தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும். தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
Recommended image2
IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Recommended image3
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Related Stories
Recommended image1
Women's T20 World Cup: பாகிஸ்தானை அசால்ட்டாக போட்டுத் தள்ளிய இந்தியா! தீப்தி சர்மா, ஸ்மிருதி மந்தனா கலக்கல்!
Recommended image2
Women's T20 World Cup: சரித்திர சாதனை படைத்த தீப்தி சர்மா.. 350 விக்கெட்டுகள்.. யாரும் செய்யாத சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved