- Home
- Sports
- Sports Cricket
- IND vs AUS 4th T20: மீண்டும் SKY-யின் தவறு! பேட்டிங் ஆர்டர் மாற்றம்! ஆஸ்திரேலியாவுக்கு சவாலான இலக்கு!
IND vs AUS 4th T20: மீண்டும் SKY-யின் தவறு! பேட்டிங் ஆர்டர் மாற்றம்! ஆஸ்திரேலியாவுக்கு சவாலான இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 168 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேட்டிங் ஆர்டர் மாறியதால் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள்.

இந்தியா vs ஆஸ்திரேலியா 4வது டி20
கராராவின் கோல்ட் கோஸ்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மாவும், சுப்மன் கில்லும் 6.4 ஓவரில் 56 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 21 பந்தில் 28 ரன் எடுத்து ஆடம் ஜாம்பா பந்தில் கேட்ச் ஆனார்.
ஷிவம் துபே, சூர்யகுமார் சொதப்பல்
பின்பு அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும்விதமாக 3வதாக களமிறங்கிய ஷிபம் துபே 18 பந்தில் 22 ரன் எடுத்து வெளியேறினார். மறுபக்கம் நிதானமாக விளையாடிய துணை கேப்டன் சுப்மன் கில் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து எல்லீஸ் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் (10 பந்தில் 20 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார்.
தேவையில்லாத பேட்டிங் ஆர்டர் மாற்றம்
இந்திய கேப்டன் சூர்யகுமார் பேட்டிங் ஆர்டரை முற்றிலுமாக மாற்றியதால் வழக்கமாக தங்களது இடத்தில் களமிறங்க வேண்டிய பேட்ஸ்மேன்கள் வேறு வேறு இடத்தில் இறங்கினார்கள். அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
மேலும் திலக் வர்மா (5), ஜிதேஷ் சர்மா (3) சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். வாஷிங்டன் சுந்தரும் (12 ரன்) நிலைக்கவில்லை. கடைசிக் கட்டத்தில் அக்சர் படேல் 11 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து அணியை 160 ரன்களை கடக்க வைத்தார்.
167 ரன்கள் எடுத்த இந்திய அணி
இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 167 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய எல்லீஸ் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளும், ஸ்டோனிஸ், பார்லட் தலா 1 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 168 என்ற சவாலான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்கிறது.