இனிமேல் சேஷிங் எல்லாம் கூடாது: ஃபர்ஸ்ட் பேட்டிங் பெஸ்ட் வின்னிங்; லாஸ்ட் 9 மேட்ச் ரெக்கார்டு!
கடைசியாக நடந்த 9 போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணியே வெற்றி வாகை சூடியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது முதல் பார்ட் முடிந்த நிலையில், 2ஆவது பார்ட் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பஞ்சாப் கிங்ஸ்
அதில், ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் அந்தந்த அணிகள் தான் வெற்றி பெற்று வந்தன. அதன் பிறகு போட்டி உள்டாவாக மாறியது. மாறாக, ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் எதிரணி தான் அதிகளவில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ்
இதே போன்று முதலில் ஆடிய அணியை விட சேஷிங் செய்த அணி அதிகளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தான் தற்போது கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் சேஷிங் செய்த அணி வரிசையாக தோல்வியை சந்தித்து வந்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அதில் லக்னோ, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தோல்வியை சந்தித்துள்ளன.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
நேற்று மொஹாலியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கும் இடையிலான 38ஆவது போட்டி நடந்தது. இதில், டாஸ் என்னவே பஞ்சாப் கிங்ஸ் தான் ஜெயிச்சது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி
ஆனால், அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான் பீல்டிங் தேர்வு செய்து தவறான முடிவு எடுத்தார். அங்கேயே பஞ்சாப் அணி தோற்றுவிட்டது என்று கூட சொல்லலாம். முதலில் பேட்டிங் ஆடிய அணி தான் ஜெயிச்சிருக்கிறது என்பதை பஞ்சாப் அணி மறந்துவிட்டது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இதையடுத்து லக்னோ அணி முதலில் ஆடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றின் 2ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்தது. 3ஆவது இடத்திலும் ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வெற்றி
இதையடுத்து கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதர்வா டைட் மட்டும் ஓரளவு ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். அவர் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிக்கந்தர் ராஸா 36 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 23 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ் தோல்வி
இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
முதலில் பேட்டிங் ஆடிய அணி வெற்றி!
பந்து வீச்சு தரப்பில் லக்னோ அணி சார்பில் யாஷ் தாகூர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி ஜெட் வேகத்தில் வந்து 2ஆவது இடம் பிடித்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
சேஷிங் டீம் தோல்வி
ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 3ஆவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது. முதலிடத்தில் சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடம் பிடித்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!