பஞ்சாப்பை பஞ்சராக்கிய லக்னோ; சென்னையை கீழே தள்ளி ஜெட் வேகத்தில் 2ஆவது இடம் பிடித்த கேஎல் ராகுல் அண்ட் டீம்!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 2 இடம் பிடித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மொஹாலி மைதானத்தில் நடந்தது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஒவ்வொருவரும் அதிரடியாக ஆடவே லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இதில் கைல் மேயர்ஸ் 24 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் குவித்தார். ஆயுஷ் பதோனி 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் உள்பட 72 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். கடைசியாக நிக்கோலஸ் பூரன் 45 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இது ஐபிஎல் வரலாற்றின் 2ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்தது. 3ஆவது இடத்திலும் ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இதையடுத்து கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களான ப்ராம்சிம்ரன் சிங் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த அதர்வா டைட், சிக்கந்தர் ராஸா ஆகியோர் இணைந்து ரன்கள் குவித்தனர்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இதில், 22 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் அதிரடியாக ஆடிய அதர்வா 36 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதே போன்று லியாம் லிவிங்ஸ்டன் 23 ரன்களில் வெளியேறினார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
தொடர்ந்து வந்த சாம் கரண் 23 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷாருக் கான் 6 ரன்களில் வெளியேற கடைசியாக வந்த ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, ஆகியோர் டக் அவுட்டில் வெளியேறினர்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
பந்து வீச்சு தரப்பில் லக்னோ அணி சார்பில் யாஷ் தாகூர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் சென்னையை பின்னுக்கு தள்ளி ஜெட் வேகத்தில் வந்து 2ஆவது இடம் பிடித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 3ஆவது இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது. முதலிடத்தில் சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இடம் பிடித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
வரும் 20 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நடக்கிறது. இதே போன்று மே 1 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.