IPL 2024: IPL Opening Ceremony, முதல் போட்டியை எங்கு எப்படி பார்க்கலாம்? யாருக்கு சாதகம்?
2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
CSK
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டின் 16ஆவது ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில், கடைசி பந்தில் சிஎஸ்கே பவுண்டரி அடித்து 5ஆவது முறையாக டிராபியை வென்று கொடுத்து அந்த சீசனை நிறைவு செய்தது.
CSK vs RCB
இதைத் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதற்காக சேப்பாக்கம் மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
CSK, Dhoni
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவோன் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதுவரையில் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. ஆதலால், அவருக்குப் பதிலாக அறிமுக வீரரான ரச்சின் ரவீந்திரா இந்த சீசனில் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பிருக்கிறது.
Chennai Super Kings, MS Dhoni
அவர் களமிறங்கவில்லை என்றால், அஜிங்க்யா ரஹானே தொடக்க வீரராக களமிறங்கலாம். இந்த சீசன் தான் தோனியின் கடைசி சீசன் என்றும் சொல்லப்படுகிறது. இதே போன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அணியின் பெயர், லோகோ மற்றும் ஜெர்சி என்று அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது.
MS Dhoni, CSK
பெங்களூர் என்பதற்கு பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற பெயருடன் இந்த சீசன் முதல் ஆர்சிபி விளையாடுகிறது. மேலும், கேமரூன் க்ரீன் அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக இடம் பெற்றுள்ளார்.
ஐபிஎல் 2024 தொடக்க விழா: IPL 2024 Opening Ceremony
ஐபிஎல் 2024 தொடக்க விழா:
இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடக்க விழா நடத்தப்படுகிறது. ஏற்கனவே சென்னை போட்டி என்பதால் ரசிகர்களின் வருகை அதிகமாக இருக்கும். அதிலேயும், தொடக்க விழா வேறு, சொல்லவா வேணும்? ரசிகர்களின் வருகை அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்க விழாவிற்காக தயார் நிலையில் உள்ள சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்
Chennai Super Kings CSK
ஐபிஎல் தொடக்க விழா – பிரபலங்கள்:
இந்த தொடக்க விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய் குமார், டைகர் ஷெராப், சோனு நிகம் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Virat Kohli
ஐபிஎல் தொடக்க விழா எப்போது?
சேப்பாக்கத்தில் நடக்கும் ஐபிஎல் 2024 தொடக்க விழா 22 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
RCB - Royal Challengers Bengaluru
நேரடி ஒளிபரப்பு:
இந்த தொடக்க விழாவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக பார்க்கலாம். ஜியோ சினிமா ஆப் மற்றும் இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம்.
ஐபிஎல் 2024 முதல் போட்டி: CSK vs RCB
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. தொடக்க விழா நடைபெறுவதால், இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு டாஸ் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த போட்டி மட்டும் இரவு 8 மணிக்கு தொடங்கும். மற்ற போட்டிகள் அனைத்தும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். டாஸ் இரவு 7 மணிக்கு போடப்படும். பிற்பகல் நடக்கும் போட்டிகள் 3.30 மணிக்கு தொடங்கும்.
இதுவரையில் நேருக்கு நேர்:
இதுவரையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் நேருக்கு நேர் மோதிய 31 போட்டிகளில் 20 போட்டிகளில் சிஎஸ்கே அணியும், ஆர்சிபி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளன. மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிய 8 போட்டிகளில் 7ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் மட்டுமே ஆர்சிபி வெற்றி பெற்றிருக்கிறது.