#AUSvsIND உண்மையாவே என்னைய விட ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் அவருதான்.! பாண்டியாவின் பெரிய மனசு
First Published Dec 6, 2020, 10:35 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஹர்திக் பாண்டியா, அந்த விருதுக்கு தன்னை விட நடராஜனே பொருத்தமானவர் மற்றும் தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி இன்று சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, மேத்யூ வேடின் அதிரடி அரைசதத்தால், 20 ஓவரில் 194 ரன்களை குவித்தது.

195 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணிக்கு கேஎல் ராகுலும் தவானும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் ஐந்து ஓவர்களிலேயே 56 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய ராகுல் 22 பந்தில் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் தவானும் கோலியும் இணைந்து சிறப்பாக ஆடினர். அரைசதம் அடித்த தவான், 52 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கோலி 24 பந்தில் 40 ரன்கள் அடித்த நிலையில், அவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் வெளியேறினார். சஞ்சு சாம்சன் 10 பந்தில் வெறும் பதினைந்து ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?