தோனிக்கு இருக்கும் மாஸ்டர் மைண்ட் ரோகித் சர்மாவுக்கு கிடையாது: ஹர்பஜன் சிங் வெளிப்படுத்தும் உண்மை!
தோனி பவுலர்களை தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள அனுமதிப்பார், ஷர்துல் தாக்கூர் சம்பவம் மூலம் விளக்கம். ரோகித் சர்மா பவுலர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நேரடியாகக் கேட்டு, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவார்.
Harbhajan Singh
எம்.எஸ்.தோனிக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த பெருமையை படைத்தவர் ரோகித் சர்மா. ஆனால், ஒருநாள் உலகக் கோப்பையை இறுதிப் போட்டி வரை வந்து கோட்டைவிட்டார். எனினும், தோனி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒன்று தான். இருவரும் டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றினர்.
அதோடு ஐபிஎல் தொடரில் தோனி மற்றும் ரோகித் இருவரும் கேப்டன்களாக இருந்து சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளனர்.
Rohit Sharma and Harbhajan Singh
தற்போது இருவருமே கேப்டன்களாக இல்லை. அணியில் சக வீரர்களாகவே விளையாடி வருகின்றனர். ஐபிஎல் தொடரில் இவர்களது தலைமையின் கீழ் ஹர்பஜன் சிங் விளையாடியிருக்கிறார். 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்காக ஹர்பஜன் சிங் விளையாடினார். ஆனால், இருவருமே வெவ்வேறு தலைவர்கள்.
MS Dhoni-Harbhajan Singh
எம்.எஸ்.தோனி தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள அனுமதிப்பார்:
பவுலர்களை தவறு செய்ய தோனி அனுமதிக்கிறார். அதன் பிறகு அவர்கள் செய்த தவறுகளிலிருந்து அவர்களாகவே திருத்திக் கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பும் கொடுக்கிறார். அப்படி ஒரு சம்பவம் தான் சிஎஸ்கே அணியில் நடந்தது. தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தார். நான், ஷார்ட் பைன் லெக்கில் பீல்டிங் செய்து கொண்டிருந்தேன்.
MS Dhoni and Harbhajan Singh
அப்போது கேன் வில்லியம்சன் களத்தில் நிற்க, ஷர்துல் தாக்கூர் பந்து வீசினார். அவர் வீசிய முதல் பந்தில் வில்லியம்சன் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் அதே லெந்த் வீச, அதே ஷாட்டை வில்லியம்சன் அடித்தார். நான் தோனியிடம் சென்று ஷர்துல் தாக்கூரை வித்தியாசமான லெந்தில் பந்து வீச சொல்லுங்கள் என்று சொன்னேன்.
அதற்கு தோனி, பாஜி நான் இப்போது அவரிடம் சென்று சொன்னால், அவர் ஒரு போதும் கற்றுக் கொள்ளமாட்டார். ஆதலால் அவராகவே கற்றுக் கொள்ளட்டும். ஷர்துல் பவுண்டரி அடிப்பது போன்று பந்து வீசினால், அதிலிருந்து விரைவில் பாடம் கற்றுக் கொள்வார் என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
Harbhajan Singh
ரோகித் சர்மா பவுலர்களிடம் சென்று என்ன வேண்டும் என்று கேட்பார்:
ரோகித் சர்மா பந்து வீச்சாளர்களிடம் சென்று அவர் என்ன விரும்புகிறார் என்பதை சொல்லி, அதனை செய்வதற்கான நம்பிக்கையையும் அவருக்கு தருகிறார். ரோகித் சர்மா மிகவும் வித்தியாசமானவர். ஒவ்வொரு பிளேயர்ஸிடமும் சென்று பேசுவார். அவர் வீரர்கள் தோளில் கையை வைத்து உங்களிடமிருந்து என்ன விரும்புகிறார் என்பதை சொல்லக் கூடியவர். உங்களால் முடியும் என்று வீரர்களுக்கு நம்பிக்கை கொடுப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.