கை குலுக்க மறுத்த இந்தியா..! ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கதறும் பாகிஸ்தான்
ஆசியகோப்பை லீக் சுற்று போட்டிக்கு பின்னர் இந்திய வீரர்கள் கை குழுக்க மறுத்தது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் முறையிட்ட பாகிஸ்தான்
செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை லீக் போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்த நிலையில், இந்திய வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போட்டியின் முடிவில் இந்திய வீரர்கள் தங்கள் வீரர்களுடன் கைகுலுக்காததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்தது. போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டின் நடத்தை குறித்தும் பிசிபி கவலை தெரிவித்துள்ளது.
கை குழுக்குவதைத் தவிர்த்த இந்தியா
போட்டிக்குப் பிந்தைய நடத்தையை மையமாகக் கொண்டு சர்ச்சை எழுந்தது, பொதுவாக மரியாதை மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் விதமாக கைகுலுக்கப்படுவது வழக்கம். கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் அவரது அணியினருடன் கைகுலுக்கவில்லை.
போட்டி நடுவர் மீதும் புகார்
"டாஸ் போட்ட நேரத்தில், இந்திய அணியுடன் கைகுலுக்க வேண்டாம் என்று போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தான் அணி நிர்வாகம் இந்த நடத்தையை விளையாட்டு உணர்விற்கு எதிரானது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளது," என்று பிசிபி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய அணியின் செய்லபாடு விளையாட்டு மாண்புக்கு எதிரானது என புகாா
சல்மான் அலி ஆகா வழக்கமான போட்டிக்குப் பிந்தைய கைகுழுக்கலைத் தவிர்த்துவிட்டதாக பிசிபி எடுத்துக்காட்டியது. "இந்திய அணியின் நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சல்மான் அலி ஆகா போட்டிக்குப் பிந்தைய கைகுழுக்கலைத் தவிர்த்துவிட்டார், ஏனெனில் போட்டியை நடத்துபவரும் ஒரு இந்தியர்தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்தை விதிகளின்படி, அணிகள் பரஸ்பர மரியாதை காட்ட வேண்டும், போட்டியின் முடிவில் எதிரணிக்கு வாழ்த்து, பாராட்டு தெரிவிப்பது உட்பட. இந்த நெறிமுறையை இந்திய அணி கடைபிடிக்கவில்லை என்று பிசிபி குற்றம் சாட்டுகிறது.