MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்திய பயிற்சியாளர் பதவியை தூக்கி எறியும் கவுதம் கம்பீர்?.. பின்னணி காரணம் இதுதான்!

இந்திய பயிற்சியாளர் பதவியை தூக்கி எறியும் கவுதம் கம்பீர்?.. பின்னணி காரணம் இதுதான்!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான பின்னணி காரணம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Feb 17 2026, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் கவுதம் கம்பீர்?
Image Credit : Gambhir\BCCI

பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் கவுதம் கம்பீர்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கவுதம் கம்பீருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பெரிய சலுகையை வழங்கியுள்ளது. அதாவது கம்பீருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர், சிஇஓ பதவிகளுடன், அணியின் உரிமையாளர் பங்கையும் அணி உரிமையாளர்கள் வழங்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ராஜஸ்தான் ராயல்ஸ் வழங்கும் மெகா ஆபர்
Image Credit : ANI

ராஜஸ்தான் ராயல்ஸ் வழங்கும் மெகா ஆபர்

2026 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் இந்த மெகா ஆஃபரை வழங்கியுள்ளதாக டைனிக் ஜாக்ரான் செய்தி வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையில் மாற்றங்கள் நடந்து வருகின்றன.

 இதன் ஒரு பகுதியாக வந்துள்ள புதிய முதலீட்டாளர் ஒருவர் கம்பீருக்கு இந்த மெகா ஆஃபரை வழங்கியுள்ளார். அணியின் இரண்டு முதல் மூன்று சதவீத பங்குகளை கம்பீருக்கு வழங்க ராஜஸ்தான் ராயல்ஸ் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் இரு பதவியில் இருக்க முடியாது

தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள கம்பீரால், ஐபிஎல் அணியில் இணைய சட்டரீதியான தடைகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் அங்கீகரித்த லோதா கமிட்டி பரிந்துரைப்படி, இந்திய அணியில் அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவர், ஒரே நேரத்தில் ஐபிஎல் அணியில் இருக்க முடியாது. ஆகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அளிக்கும் கவர்ச்சிகரமான சலுகையை ஏற்க வேண்டுமானால், கம்பீர் இந்தியப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.

Related Articles

Related image1
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Related image2
IND vs PAK: ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன்.. யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து மாஸ்!
33
ஐபிஎல்லில் கம்பீரின் சாதனை
Image Credit : AFP

ஐபிஎல்லில் கம்பீரின் சாதனை

ஐபிஎல் தொடரில் வீரராகவும், ஆலோசகராகவும் கம்பீருக்கு சிறந்த சாதனை உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இரண்டு முறை கேப்டனாகவும், ஒரு முறை ஆலோசகராகவும் வழிநடத்தி கோப்பையை வென்றுள்ளார். மேலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தொடர்ச்சியாக இரண்டு சீசன்களில் பிளேஆஃபிற்கு அழைத்துச் சென்றதிலும் கம்பீர் முக்கியப் பங்காற்றினார்.

கம்பீரின் முடிவு இதுவா?

தற்போது 2026 டி20 உலகக் கோப்பைக்கான பணிகளில் கம்பீர் தீவிரமாக உள்ளார். 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை பிசிசிஐயுடன் கம்பீருக்கு ஒப்பந்தம் உள்ளது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிலும் கம்பீர் இந்திய அணிக்கு பயிற்சியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி தனக்கு நாட்டுக்கு சேவை செய்ய கிடைத்த பெரிய வாய்ப்பு என கம்பீர் அடிக்கடி கூறி வருகிறார். அகவே அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆபரை ஏற்க மாட்டார் என்றே பலரும் தெரிவிக்கின்றனர்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!
Recommended image2
IND vs ENG: ரோஹித் சதம் அடித்தும் இந்தியா தோல்வி... லார்ட்ஸில் கோட்டைவிட்ட 5 இடங்கள்..
Recommended image3
IND vs ENG: இந்திய பவுலர்கள் சொதப்பல்! இங்கிலாந்து மெகா ஸ்கோர்... என்ன காரணம்a?
Related Stories
Recommended image1
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Recommended image2
IND vs PAK: ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன்.. யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து மாஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved