ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனைகள் - கவுதம் காம்பீர் ஹாட்ரிக் டக் அவுட், தினேஷ் கார்த்திக் 18 முறை டக் அவுட்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்துள்ளார். 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த 3 போட்டிகளில் டக் அவுட்டாகி மோசமான சாதனையை தனக்கு சொந்தமாக்கினார். ஐபிஎல் தொடரில் 4 ஓவர்கள் வீசி அதிக ரன்கள் கொடுத்தவர்களின் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் பேசில் தம்பி முதலிடம் பிடித்துள்ளார்.
Gautam Gambhir
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் காம்பீர் ஐபிஎல் தொடரில் 2 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு டிராபி வென்று கொடுத்துள்ளார். இது அவரது சாதனையின் பட்டியலில் இருந்தாலும் மோசமான சாதனையையும் கவுதம் காம்பீர் ஐபிஎல் தொடரில் படைத்திருக்கிறார்.
KKR - Gautam Gambhir
2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த 3 போட்டிகளில் டக் அவுட்டாகி மோசமான சாதனையை தனக்கு சொந்தமாக்கினார். கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த கவுதம் காம்பீர் அந்த சீசனின் முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 8 பந்துகளில் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதே போன்று 2ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 4 பந்துகளில் 0 ரன்னில் வெளியேறினார்.
Gautam Gambhir - Kolkata Knight Riders
கடைசியாக ஆர்சிபி அணிக்கு எதிராக கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ஹாட்ரிக் டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். எனினும், இந்த சீசனில் கேகேஆர் டிராபியை வென்று சாதனை படைத்தது.
Mohit Sharma and Basil Thampi
பேசில் தம்பி
ஐபிஎல் தொடரில் 4 ஓவர்கள் வீசி அதிக ரன்கள் கொடுத்தவர்களின் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் பேசில் தம்பி நம்பர் 1 இடம் பிடித்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
Basil Thampi - Sunrisers Hyderabad
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் 4 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் கொடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஆனால், இந்த மோசமான சாதனையை 2024 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் மோகித் சர்மா 4 ஓவர்கள் வீசி 73 ரன்கள் கொடுத்து முறியடித்துள்ளார்.
Dinesh Karthik - Royal Challengers Bengaluru
தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆனவர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். ஆம், அவர் விளையாடிய 257 போட்டிகளில் 18 போட்டிகளில் டக் அவுட்டாகி அதிக முறை டக் அவுட் ஆனவர்களின் பட்டியலில் தினேஷ் கார்த்திக் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.
Dinesh Karthik
இவர், டெல்லி, பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று 6 அணிகளில் இடம் பெற்று விளையாடியுள்ளார். கடைசியாக 2024 ஐபிஎல் தொடரில் விளையாடிய பிறகு ஓய்வு பெற்றார். தினேஷ் கார்த்திக்கை தொடர்ந்து 17 முறை டக் அவுட் ஆனவர்களின் பட்டியலில் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.