- Home
- Sports
- Sports Cricket
- ரோகித், கோலி, ஷமிக்கு வேட்டு வைக்கும் கவுதம் கம்பீர்..! இந்திய அணி வீரர்களுக்கு அதிரடி உத்தரவு!
ரோகித், கோலி, ஷமிக்கு வேட்டு வைக்கும் கவுதம் கம்பீர்..! இந்திய அணி வீரர்களுக்கு அதிரடி உத்தரவு!
Gambhir’s Fitness Rules Threaten Rohit, Kohli & Shami: இந்திய அணியில் இடம்பிடிக்க பிட்னஸ் மிகவும் முக்கியம். இல்லாவிட்டில் இடம் கிடைக்காது என்பதை கம்பீர் தெளிவாக சொல்லி விட்டார்.

டி20 தொடரை வென்ற இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி ஓடிஐ தொடரில் தோல்வி கண்டாலும், டி20 தொடரை 2 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு (2026) இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா பட்டத்தை தக்கவைப்பதில் உறுதியாக உள்ளது.
கெளதம் கம்பீர் உறுதி
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இலக்கை இந்திய அணி இன்னும் அடையவில்லை என்று தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''எங்கள் டிரஸ்ஸிங் ரூம் மிகவும் வெளிப்படையானதாகவும், நேர்மையாகவும் இருந்து வருகிறது, அதை நாங்கள் அப்படியே பராமரிக்க விரும்புகிறோம்.
டி20 உலகக்கோப்பை இலக்கை அடையவில்லை
டி20 உலகக் கோப்பைக்கான எங்கள் இலக்கை நாங்கள் இன்னும் அடையவில்லை என்று நினைக்கிறேன். வீரர்கள் உடற்தகுதியுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் இருக்க வேண்டிய இடத்தை அடைய இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன" என்று கூறியுள்ளார்.
வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்து சோதிப்பதன் மூலம் அவர்களின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர முடியும் என்றும் கம்பீர் நம்புகிறார். இதற்கு உதாரணமாக சுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
பிட்னஸ் டெஸ்ட் முக்கியம்
"வீரர்களை கடினமான சூழலில் தள்ளுங்கள், அது மிகவும் எளிமையானது. சுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டபோதும் நாங்கள் அதையே செய்தோம்" என்று கம்பீர் கூறியுள்ளார். இந்திய அணி வீரர்கள் நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதில் கம்பீர் உறுதியாக உள்ளார். இதனால் தான் வழக்கமாக நடக்கும் 'யோ யோ' உடற்தகுதி டெஸ்டுடன் சவால் வாய்ந்த 'பிராங்கோ' டெஸ்டையும் கம்பீர் கொண்டு வந்தார்.
முகமது ஷமி இடத்துக்கு ஆபத்து
இந்திய அணியில் இடம்பிடிக்க பிட்னஸ் மிகவும் முக்கியம். இல்லாவிட்டில் இடம் கிடைக்காது என்பதை கம்பீர் தெளிவாக சொல்லி விட்டார். முழுமையான உடற்தகுதியை பெறவில்லை என்பதால்தான் முகமது ஷமியை அணியில் எடுக்கவில்லை என்று இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஏற்கெனவே கூறி விட்டார். 2027ல் ஓடிஐ உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், இதில் விளையாட வேண்டும் என ரோகித் சர்மா, விராட் கோலி ஆர்வமாக உள்ளனர்.
ரோகித், விராட் கோலிக்கும் சிக்கல்
இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், கவுதம் கம்பீர் வைக்கும் பிட்னஸ் டெஸ்ட் இவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். சரியான உடற்தகுதியுடன் இல்லாவிட்டால் ரோகித், கோலியையும் ஓடிஐ அணியில் இருந்து கம்பீர் அசால்ட்டாக தூக்கி எறிந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.