- Home
- Sports
- Sports Cricket
- டெஸ்ட் கிரிக்கெட்டின் ரன் மெஷின்! கேப்டன்சியிலும் கோலி தான் கிங்! சாதனைகளின் லிஸ்ட்!
டெஸ்ட் கிரிக்கெட்டின் ரன் மெஷின்! கேப்டன்சியிலும் கோலி தான் கிங்! சாதனைகளின் லிஸ்ட்!
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், அவர் டெஸ்ட்டில் படைத்த சாதனைகள், கேப்டன்சியில் செய்த மேஜிக் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Virat Kohli Test cricket Record
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ''டெஸ்ட் கிரிக்கெட் என்னை சோதித்தது. என்னை வடிவமைத்தது. மேலும் நான் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்லும் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்" என்று அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்
கிரிக்கெட் உலகில் எண்ணற்ற சாதனைகளை தன்வசம் வைத்திருக்கும் விராட் கோலி, டெஸ்ட்ட்டிலும் யாரும் எட்டமுடியாத பெரும் சாதனைகளை படைத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான விராட் கோலி, நீண்ட கால கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மொத்தம் 123 டெஸ்ட் போட்டிகளில் 46.85 சராசரியுடன் 9,230 ரன்களை கோலி குவித்துள்ளார். இதில் 30 சதங்களும், 31 அரை சதங்களும் அடங்கும்.
டெஸ்ட் கேப்டனாக அசத்திய விராட் கோலி
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் நான்காவது அதிக ரன் குவிப்பாளராக கோலி உள்ளார். 123 போட்டிகளில் 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள் உட்பட 9230 ரன்களை குவித்துள்ளார். 2011 முதல் 2022 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு தனது கேப்டன் பதவியை கைவிடும் வரை விராட் கோலி இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தினார். 68 போட்டிகளில் 40 வெற்றிகளுடன் கோலி மிகவும் வெற்றிகரமான இந்திய கேப்டனாக வலம் வந்தார். மேலும் 58.82 வெற்றி சதவீதத்தைக் கொண்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்
2019 ஆம் ஆண்டில் பார்டர்-கவாஸ்கர் டிராபியை வென்ற இந்திய அணிக்கு தலைமை தாங்கியபோது, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் விராட் கோலி ஆவார். டெஸ்ட் கேப்டனாக இந்தியாவுக்காக அதிக ரன் குவித்தவர் என்ற சாதனையை கோலி வைத்திருக்கிறார். 113 இன்னிங்ஸ்களில் 20 சதங்கள் மற்றும் 18 அரைசதங்கள் உட்பட 5864 ரன்கள் எடுத்து, 54.80 சராசரியுடன் 54.80 ரன்கள் குவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனுக்குப் பிறகு ஒரு கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த இரண்டு பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர்.