- Home
- Sports
- Sports Cricket
- கிரிக்கெட் தொடரில் அறிமுகமான ஒரு சில போட்டிகளிலேயே காணாமல் போன இந்திய வீரர்கள்!
கிரிக்கெட் தொடரில் அறிமுகமான ஒரு சில போட்டிகளிலேயே காணாமல் போன இந்திய வீரர்கள்!
ஆகாஷ் சோப்ரா முதல் முரளி கார்த்திக் வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாடிய நிலையில், அதன் பிறகு அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.

ஆகாஷ் சோப்ரா:
கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆகாஷ் சோப்ரா, 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், அதன் பிறகு அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டியில் கூட அவர் இடம் பெறவில்லை. கடந்த 2008, 2009 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ளார். அதன் பிறகு அவர் பங்கேற்கவில்லை. தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக, கிரிக்கெட் விமர்சகராக சிறந்து விளங்குகிறார்.
ரோஹன் கவாஸ்கர்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரின் மகன் ரோஹன் கவாஸ்கர். தந்தையின் செல்வாக்கு அவரை இந்திய அணியில் இடம் பெற செய்யவில்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றார். கடந்த 2003- 2004 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முகமது கைஃபிற்கு பதிலாக இடம் பெற்றார். ஜனவரியில் முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடிய ரோஹன் கவாஸ்கர், செப்டம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இடம் பெற்றார். அதன் பிறகு எந்தப் போட்டியிலும் அவர் இடம் பெறவில்லை. 11 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவர் 150 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
தினேஷ் மோங்கியா:
உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த தினேஷ் மோங்கியா 2001 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 159 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். கடந்த 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
வேணுகோபால் ராவ்:
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக அறிமுகமான வேணுகோபால் ராவ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எத்ரான போட்டியில் கடைசியாக விளையாடினார். ஐபிஎல் தொடரிலும் ஒரு சில போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஜோகிந்தர் சர்மா:
கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை டி20 போட்டியை இந்தியா கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் ஜோகிந்தர் சர்மா. வங்கதேசத்திற்கு எதிராக கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகமான ஜோகிந்தர் சர்மா, 2011 ஆம் ஆண்டு வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று ஐபிஎல் டி20 போட்டியிலும் விளையாடியிருக்கிறார்.
ஜோகிந்தர் சர்மா:
4 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டி20 போட்டியில் விளையாடியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் அதன் பிறகு அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஹரியானா காவல்துறையில் துணை காவல் கண்காணிப்பாளராக இருக்கிறார்.
முரளி கார்த்திக்:
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். 37 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முரளி கார்த்திக் 37 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முரளி கார்த்திக் 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். 51 போட்டிகளில் விளையாடிய முரளி கார்த்திக் 31 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார்.