உலகத்தில் எதையோ சாதிச்ச ஃபீலிங்; உற்சாகமாக ரசிகர்களுக்கு கை கொடுத்து மகிழ்ந்த புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை இந்த உலகத்தில் எதையோ சாதித்த உணர்வோடு ரசிகர்களுக்கு கை கொடுத்து சூர்யகுமார் யாதவ் மகிழந்துள்ளார்.
இந்தியா
விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடந்தது. இதில், இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டார். முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா
அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. இதில், ஜோஷ் இங்கிலிஸ் 110 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்களும் எடுத்தனர்.
டீம் இந்தியா
பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் இருவரும் சொதப்பி விட்டனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி
இவர்களைத் தொடர்ந்து இஷான் கிஷான் மற்றும் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். முதல் 10 ஓவருக்கு இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது.
சூர்யகுமார் யாதவ்
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 39 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைப் போன்று சூர்யகுமார் யாதவ்வும் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸ் உள்பட 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.
13ஆவது டி20 கேப்டன்
கடைசி பந்தில் இவர் அடித்த சிக்ஸ் மூலமாக இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், அது நோபால் என்று அறிவிக்கப்படவே, இந்தியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தனக்கு சொந்தமாக்கியது.
இந்தியா - ஆஸ்திரேலியா டி20
இந்தப் போட்டியின் மூலமாக இந்திய அணிக்கு டி20 போட்டிக்கு 13ஆவது கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக விராட் கோலி, ரோகித் சர்மா, எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ஜஸ்ப்ரித் பும்ரா, ருதுராஜ் கெய்க்வாட், ரிஷப் பண்ட், அஜிங்க்யா ரஹானே, வீரேந்திர சேவாக் ஆகியோர் டி20 போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளனர்.
13th T20 Captain Suryakumar Yadav
ஒரு கேப்டனாக தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு கை கொடுத்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த உலகத்தில் எதையோ சாதித்த ஒரு உணர்வோடு சக வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, ரசிகரகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.