- Home
- Sports
- Sports Cricket
- ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
வெளிநாட்டு வீரர்கள் மது அருந்துவது இயல்பான ஒன்று. ஆனால் முக்கியமான தொடருக்கு நடுவே இங்கிலாந்து வீரர்கள் அதிகமாக மது அருந்தியதால் சரிவர பயிற்சியில் ஈடுபட முடியாமல் டெஸ்ட் போட்டியில் சொதப்பியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து படுதோல்வி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பாரம்பரியம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இப்போது வரை நடந்த முதல் 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்து தொடரை பறிகொடுத்து விட்டது.
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும், பிரிஸ்பேனில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் சொதப்பல்
அடிலெய்டில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியிலும் 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்து விட்டது. இந்த தொடரில் இங்கிலாந்து பவுலிங் ஓரளவு சிறப்பாக இருந்தாலும் பேட்டிங் படுமோசமாக இருந்து வருகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார் வீரர் ஜோ ரூட் 1 சதம் அடித்ததை தவிர பெரிதாக எதும் செய்யவில்லை. இதேபோல் பென் டக்கெட், ஹாரி ப்ரூக், சாக் க்ரொலி, ஆலி போப் என ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் சொதப்பி விட்டனர்.
அதிகமாக மது குடித்த இங்கிலாந்து வீரர்கள்
இந்த நிலையில், ஆஷஸ் தொடரின்போது இங்கிலாந்து வீரர்கள் ஓவராக மது குடித்ததால் அவர்களின் செயல்திறன் பாதிக்கப்பட்டு தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டிக்கும், 3வது போட்டிக்கும் இடையே நீண்ட இடைவெளி இருந்தது. இங்கிலாந்து வீரர்கள் ஓய்வெடுப்பதற்காக பிரிஸ்பேனுக்கு வடக்கே சன்ஷைன் கோச்சில் உள்ள நூசா நகரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
தோல்விக்கு காரணம் இதுவா?
கடற்கரை அருகில் உள்ள அந்த ரிசார்ட்டில் இங்கிலாந்து வீரர்கள் ஓவராக மது குடித்து விட்டு ஆட்டம் போட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு புகார்கள் சென்றன. வெளிநாட்டு வீரர்கள் பீர், ஒயின் உள்ளிட்ட மது வகைகளை அருந்துவது இயல்பான ஒன்று.
ஆனால் முக்கியமான தொடருக்கு நடுவே இங்கிலாந்து வீரர்கள் அதிகமாக மது அருந்தியுள்ளனர். இதனால் சரிவர பயிற்சியில் ஈடுபட முடியாமல் 3வது டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடமல் சொதப்பியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
விசாரணைக்கு உத்தரவு
இங்கிலாந்து வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டின் கிரிகெட் வாரிய இயக்குநர் ராப் கீ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''போட்டியின் இடைவேளையின்போது வீரர்கள் மது அருந்தியது குறித்து எங்களுக்கு பிரச்சனையில்லை.
ஆனால் விளையாட்டு வீரர்கள் போட்டியின் இடைவேளையின்போது அதிக அளவு மது அருந்துவதை நாங்கள் எதிர்பார்க்க மாட்டோம். எங்கள் வீரர்கள் அதிக அளவு மது அருந்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து நாங்கள் விசாரணை நடத்துவோம்'' என்று தெரிவித்தார்.
