இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு – 20 வயது இளம் புயலை களமிறக்கும் இங்கிலாந்து!
இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Ben Stokes
2024 புத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரானது வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
England Test Squad
இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் தான் அவருக்கு இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
England Tour of India Test Series
ஆனால், அதற்குள்ளாக அவர் டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், அவரால் பவுலிங் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி தான். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 20 வயதான ஆப் ஸ்பின்னர் சோயப் பஷீர் அணியில் அறிமுகமாகிறார். இவர், ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
India vs England Test Series 2024
இவரைத் தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளரான டாம் ஹார்ட்லி மற்றும் வேகப்பந்து வீச்சாளரான கஸ் அட்கின்சன் ஆகியோரும் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளனர். England Tour Of India 2024
England Test Squad against India
கடந்த ஆண்டு கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரெஹான் அகமதுவிற்கும் இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 4 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். கிறிஸ் வோக்ஸிற்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
England Test Series - Shoaib Bashir
ஆசஸ் தொடரில் இடம் பெறாத பென் ஃபோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆலிவ் போப் மற்றும் ஜாக் லீச் இருவரும் முதுகு மற்றும் தோள்பட்ட காயங்களுக்கு பிறகு அணியில் மீண்டும் இணைந்துள்ளனர். England 16 Member Test Squad Against India
England Test Squad
இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்- இங்கிலாந்து அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சோயப் பஷீர், ஹாரி ப்ரூக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலிவ் போப், ஆலிவ் ராபின்சன், ஜோ ரூட், மார்க் வுட்.