- Home
- Sports
- Sports Cricket
- ஷிகர் தவானுக்கு சுத்து போட்ட அமலாக்கத்துறை! அதிரடி சம்மன்! சூதாட்ட செயலியால் வந்த வினை!
ஷிகர் தவானுக்கு சுத்து போட்ட அமலாக்கத்துறை! அதிரடி சம்மன்! சூதாட்ட செயலியால் வந்த வினை!
சட்டவிரோத சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் ஷகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஷிகன் தவானுக்கு அமலாகக்கத்துறை சம்மன்
சட்டவிரோத சூதாட்ட செயலியான 1xBet தொடர்பான பணமோசடி வழக்கில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பியுள்ளது. அதன்பேரில் ஷிகர் தவான் அமலாக்கத்துறை முன் ஆஜராகி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வாக்குமூலம் அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமலாகக்கத்துறை சம்மன் அனுப்பியது ஏன்?
சட்டவிரோத சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் பங்கேற்றதற்காக ஷிகர் தவானுக்கு வழங்கப்பட்ட பணம் மற்றும் அதன் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை விளக்கம் கோர உள்ளது. இது ஒரு பணமோசடி வழக்கு என்பதால், தவானின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது.
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய தவான்
சமூக ஊடக பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் தவான் செயலியை விளம்பரப்படுத்தியதாகவும், நிறுவனத்துடனான அவரது தொடர்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தளத்தை விளம்பரப்படுத்துவதில் தவானின் பங்கு என்ன என்பதை அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருக்கிறது.
சுரேஷ் ரெய்னாவிடம் ஏற்கெனவே விசாரணை
கோடிக்கணக்கான முதலீட்டாளர்களை ஏமாற்றி, மிகப்பெரிய வரிகளை ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பல சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கடந்த மாதம் இந்த வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா விசாரிக்கப்பட்டார். மேலும் பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இந்த விசாரணை வளையத்தில் உள்ளனர்.
மேலும் பல பிரபலங்கள்
அதாவது நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் உர்வசி ரௌதாலா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரின் பெயர்கள் இந்த வழக்குடன் தொடர்புடையவை. கடந்த மாதம் ரெய்னா ED-யால் விசாரிக்கப்பட்டார், கடந்த ஆண்டு ஜூன் மாதம், அவரும் ஹர்பஜனும் மற்ற பிரபலங்களுடன் சேர்ந்து அமலாக்கத்துறை முன் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை
இதற்கிடையே ஆன்லைன் சூதாட்ட தளங்களுக்கு முழுமையாக தடை விதிக்கும் வகையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இது பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்லைன் கேம்களுக்கும் தடை விதிக்கிறது. இதையும் மீறி ஆன்லைன் சூதாட்ட சேவைகளை வழங்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.