கிரிக்கெட்டுக்கு குட் பை சொன்ன சிஎஸ்கே ஜாம்பவான்: 40 வயதில் ஓய்வை அறிவித்த பிராவோ
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான டிவைன் பிராவோ அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Dwayne Bravo
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான டிவைன் பிராவோ தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 40 வயதான அவர் இன்ஸ்டாகிராமில், ஒரு பதிவில், “நடந்துகொண்டிருக்கும் கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) 2024 சீசன் தனது கடைசி தொழில்முறை போட்டியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Bravo, Pollard
ஐபிஎல் தொடர்களுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த கரீபியன் லீக் போட்டிகளில் பிராவோ அதிக கவனம் செலுத்தினார். சென்னை அணி 4 முறை கோப்பையை கைப்பற்ற பிராவோ பக்கபலமாக இருந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார்.
DJ Bravo
578 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ மொத்தமாக 630 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக வலம் வருகிறார். மேலும் 441 இன்னிங்ஸ்களில் விளையாடி 6970 ரன்களைக் குவித்து தன்னை டி20யின் முன்னணி ஆல் ரவுண்டராக நிரூபித்துக் காட்டி உள்ளார்.
Dwayne Bravo
இறுதியாக 2021ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தொழில்முறை போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
Bravo
மேலும் இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நீடித்து வரும் நிலையில் தனது சொந்த மண்ணில், சொந்த மக்கள் முன்னிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவருக்கு ஒரு சிறந்த தருணமாகவே அமையும்.