- Home
- Sports
- Sports Cricket
- ஆசிய கோப்பைக்கு 'ஆப்பு' வைக்கும் பிசிசிஐ! வங்கதேசத்தையும் புறக்கணிக்க முடிவு! விழிபிதுங்கும் பாகிஸ்தான்!
ஆசிய கோப்பைக்கு 'ஆப்பு' வைக்கும் பிசிசிஐ! வங்கதேசத்தையும் புறக்கணிக்க முடிவு! விழிபிதுங்கும் பாகிஸ்தான்!
பிசிசிஐ வங்கதேசம் செல்ல மறுத்துள்ள நிலையில் ஆசிய கோப்பை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Asia Cub: BCCI Refuses To Go To Dhaka
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 வடிவில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் இந்த தொடர் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், போட்டி நடைபெறும் இடங்கள், மைதானங்கள் என ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த போட்டி தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் ஏழாம் பொருத்தம்
ஆனால் பிசிசிஐ வங்கதேசம் செல்ல மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மாணவர் புரட்சியால் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டாதால் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால அதிபர் ஆனார். அவர் பதவியேற்றது முதல் இந்தியாவும், வங்கதேசத்துக்கும் இடையே ஏழாம் பொருத்தம் நிலவி வருகிறது. முகமது யூனுஸ் இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார்.
டாக்காவுக்கு வர மாட்டோம் என இந்தியா திட்டவட்டம்
வங்கதேசம் பல விஷயங்களில் இந்தியாவுக்கு எதிராக நிற்கும் நிலையில் ஆகஸ்ட் 2025இல் நடைபெறவிருந்த இந்திய அணியின் வங்கதேச சுற்றுப்பயணமும் செப்டம்பர் 2026க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெறும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பிசிசிஐ கூறியுள்ளது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக உள்ள பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி டாக்காவில் கூட்டத்தை நடத்துவதில் உறுதியாக உள்ளதால் இந்தியா டாக்கா வரமாட்டோம் என்பதில் ஆணித்தரமாக உள்ளது.
விழிபிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்
இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் கைகோர்த்துள்ள இந்தியா, இலங்கை, ஓமன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் டாக்காவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் சட்டவிதிகளின்படி, முக்கிய உறுப்பு நாடுகளின் பங்கேற்பு இல்லாமல் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் செல்லாததாக கருதப்படும். ஆகையால் இந்தியாவின் இந்த முடிவால் பாகிஸ்தான் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.
ஆசிய கோப்பையில் இருந்து விலகும் இந்தியா
ஆசிய கோப்பை நடந்தால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இது நஷ்டத்தில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் பலனளிக்கும். ஆனால் பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி இருக்கும் அமைப்பின் கீழ் இந்தியா விளையாட விரும்பவில்லை என்பதால் இந்தியா ஆசிய கோப்பையில் இருந்தே விலக முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. அப்படி இந்தியா விலகினால் இந்த தொடரை நடத்தியே பயன் இல்லை.
இந்தியா விலகினால் ஆசிய கோப்பையே நடக்காது
ஏனெனில் ஆசிய கோப்பை போட்டியின் நிதி ஆதரவில் பெரும் பகுதி இந்திய ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களிடமிருந்து வருகிறது. சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) 2024 இல் ஆசிய கோப்பை நிகழ்வுகளுக்கான ஊடக உரிமைகளை எட்டு ஆண்டுகளில் 170 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
பிசிசிஐ ஆசிய கோப்பையில் இருந்து விலகினால் இந்தியா ஸ்பான்சர் நிறுவனங்களும், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனமும் அதில் இருந்து விலகும். இதனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். இதனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் என்ன செய்வது என தெரியாமல் யோசித்து வருக்றது.