MS Dhoni Friend: தோனியின் பெஸ்ட் ஃப்ரண்ட் யார்? யுவராஜ் சிங்கா? சுரேஷ் ரெய்னாவா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், தோனிக்கு மிகவும் நெருக்கமானவர் யார் என்பதை இந்த பார்வை விளக்குகிறது.
MS Dhoni and Yuvraj Singh
கிரிக்கெட்டில் அசைக்க முடியாத உச்சம் தொட்டவர் மகேந்திர சிங் தோனி. நீண்ட தலைமுடி வைத்துக் கொண்டு ஒரு சாதாரண விக்கெட் கீப்பராக இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் தோற்று வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா என்ற நிலையில் இருந்தார். அதன் பிறகு அதிரடியாக விளையாடி தான் யார் என்பதை நிரூபித்து காட்டி இன்று உலகமே கொண்டாடும் ஒரு ஹீரோவாக திகழ்கிறார்.
MS Dhoni and Suresh Raina
கிரிக்கெட் மீதான காதல், புத்தி கூர்மை, டிஆர்எஸ் எடுக்கும் முறை, வீரர்களை கையாளும் முறை, பீல்டிங் செட்டப், பவுலர்கள் மாற்றம் என்று தனது கிரிக்கெட் நுட்பத்தின் மூலமாக இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்று கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார்.
MS Dhoni and Yuvraj Singh
தோனி களத்தில் நிற்கிறார் என்றால் அவருக்கு பந்து வீச ஒரு பவுலர் பிறந்து தான் வர வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் கூட குறைவான பந்துகளில் அரைசதம் விளாசி வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவையே அதிர வைத்தார். அவருக்கு பந்து வீச முடியாது என்று மைதானத்திலிருந்து புறப்பட்ட காட்சியும் கண் முன்னே நிற்கிறது.
Yuvraj Singh and MS Dhoni
இது ஒரு புறம் இருக்க கிரிக்கெட்டில் தோனியின் சிறந்த நண்பனாக யுவராஜ் சிங் இருந்து வந்துள்ளார். பல போட்டிகளில் தோனி மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இணைந்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் யுவி மற்றும் தோனி இருவரும் இணைந்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தனர்.
MS Dhoni and Yuvraj Singh
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் யுவராஜ் சிங்கிற்கு தொடர் நாயகன் விருதாக பைக் பரிசாக வழங்கப்பட்டது. அதில், யுவராஜ் சிங் மற்றும் தோனி இருவரும் மைதானத்தில் வலம் வந்தனர். தோனி தான் அந்த பைக்கை ஓட்டிச் சென்றார்.
Suresh Raina and MS Dhoni
அந்தளவிற்கு இருவரும் நண்பர்களாக இருந்தனர். ஆனால், ஒரு சில காரணங்களால் அவர்களுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இவர்களுக்கு இடையிலான பிணைப்பை யாராலும் மாற்ற முடியாது. ஆனால், சுரேஷ் ரெய்னா நண்பர் இல்லையா என்று கேட்டால். அப்படியில்லை, அவரும் நண்பர் தான்.
MS Dhoni and Suresh Raina
இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலமாக கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஒருநாள் ராஞ்சியில் உள்ள தோனி வீட்டிற்கு ரெய்னாவை அழைத்துள்ளார். அப்போது ரெய்னா தரையில் படுத்து தூங்கியுள்ளார். ஏன் என்று கேட்டதற்கு அது தனது பழக்கம் என்று ரெய்னா கூற, அதன் பிறகு தோனியும் தரையில் படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
Suresh Raina and MS Dhoni
தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்பிய போது அது முதலில் ரெய்னாவிற்கு தான் தெரிந்துள்ளது. மேலும் சுரேஷ் ரெய்னா மூலமாகத் தான் ஷிவா பிறந்த செய்தியை தோனி அறிந்திருக்கிறார். சாக்ஷி முதலில் ரெய்னாவிடம் தான் ஷிவா பிறந்த செய்தியை கூறியிருக்கிறார்.
MS Dhoni and Suresh Raina
ODIகளில் தோனி மற்றும் ரெய்னா இடையேயான சராசரி பார்ட்னர்ஷிப் 62.14 ஆகும், இதில் 9 சதம் மற்றும் 17 அரைசத பார்ட்னர்ஷிப்கள் உள்ளன. இது மற்ற எந்த இந்திய வீரர்களின் பார்ட்னர்ஷிப்பை விட அதிகம் ஆகும்.