தோனி மட்டும் கடவுள் அல்ல, புவனேஷ்வர் குமாரும் கடவுள் தான்: புவி காலில் விழுந்து வணங்கிய டேவிட் வார்னர்!
டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து வணங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டேவிட் வார்னர் - புவனேஷ்வர் குமார்
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 34 ஆவது போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.
புவனேஷ்வர் குமார் காலில் விழுந்து வணங்கிய டேவிட் வார்னர் - டுவிட்டர் வீடியோ!
டேவிட் வார்னர் - புவனேஷ்வர் குமார்
அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணியில் பில் சால்ட் டக் அவுட்டானார். மிட்செல் மார்ஷ் 25 ரன்களில் வெளியேறினார். வார்னர் 21, சர்ஃபராஸ் கான் 10, மணீஷ் பாண்டே 34, அக்ஷர் படேல் 34 என்று சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.
புவனேஷ்வர் குமார் காலில் விழுந்து வணங்கிய டேவிட் வார்னர் - டுவிட்டர் வீடியோ!
டேவிட் வார்னர் - புவனேஷ்வர் குமார்
பின்னர், ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மாயங்க் அகர்வால் மட்டும் பொறுமையாக ஆடி 49 ரன்கள் சேர்த்தார். ஹென்ரிச் கிளாசன் 31 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடசியாக ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து தனது சொந்த மைதானத்தில் 7 ரன்களில் தோல்வி அடைந்தது.
புவனேஷ்வர் குமார் காலில் விழுந்து வணங்கிய டேவிட் வார்னர் - டுவிட்டர் வீடியோ!
டேவிட் வார்னர் - புவனேஷ்வர் குமார்
இதற்கு முன்னதாக டெல்லியில் நடந்த போட்டியில் ஹைதரபாத் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
புவனேஷ்வர் குமார் காலில் விழுந்து வணங்கிய டேவிட் வார்னர் - டுவிட்டர் வீடியோ!
டேவிட் வார்னர் - புவனேஷ்வர் குமார்
இந்த நிலையில், இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து வணங்கி அதன் பிறகு அவரை கட்டியணைத்துள்ளார். அந்த வீடியோ ஐபிஎல் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
புவனேஷ்வர் குமார் காலில் விழுந்து வணங்கிய டேவிட் வார்னர் - டுவிட்டர் வீடியோ!
டேவிட் வார்னர் - புவனேஷ்வர் குமார்
கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்ற வார்னர், 2014 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். அந்த அணியில் கேப்டனாகவும் இருந்தார். 2016 ஆம் ஆண்டு வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றது.
புவனேஷ்வர் குமார் காலில் விழுந்து வணங்கிய டேவிட் வார்னர் - டுவிட்டர் வீடியோ!
டேவிட் வார்னர் - புவனேஷ்வர் குமார்
2021 ஆம் ஆண்டு வரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று விளையாடிய அவர் கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக ரூ.6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். தற்போது ரிஷப் பண்ட் இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புவனேஷ்வர் குமார் காலில் விழுந்து வணங்கிய டேவிட் வார்னர் - டுவிட்டர் வீடியோ!
டேவிட் வார்னர் - புவனேஷ்வர் குமார்
தற்போது வரையில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 2 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. வரும் 29 ஆம் தேதி டெல்லியில் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
புவனேஷ்வர் குமார் காலில் விழுந்து வணங்கிய டேவிட் வார்னர் - டுவிட்டர் வீடியோ!