டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்களின் காதல் வாழ்க்கை பற்றி தெரியுமா?
லக்னோ மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 26ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதுவரையில் இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெறவில்லை.
Ishant Sharma and Pratima Singh
இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மாவின் மனைவி பிரதிமா சிங். இவர், இந்திய பெண்கள் தேசிய கூடைப்பந்து அணியின் முக்கிய உறுப்பினர். கடந்த 2011 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த கூடைப்பந்து போட்டியின் போது இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர். அதன் பிறகு அங்கிருந்து 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் வரை சென்ற இவர்களது உறவு பிறகு திருமணத்தில் முடிந்தது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
Mukesh Kumar and Divya Singh
முகேஷ் குமார் – திவ்யா சிங்
கடந்த ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்ற முகேஷ் குமார், நவம்பர் 28 ஆம் ஆண்டு திவ்யா சிங்கை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக பிப்ரவரி 23 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். தற்போது 5 மாத புது மாப்பிள்ளையாக டெல்லி அணியில் விளையாடி வருகிறார்.
Mitchell Marsh Greta Mack
மிட்செல் மார்ஷ் – கிரேட்டா மேக்
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி மிட்செல் மார்ஷ் மற்றும் கிரேட்டா மேக்கிற்க் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது காதல் மலர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
Axar Patel and Meha Patel
அக்ஷர் படேல் – மேகா படேல்:
கடந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அக்ஷர் படேல் மற்றும் மேகா படேல் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேகா, ஒரு சிறந்த ஊட்டச்சத்து நிபுணர். நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமண பந்தத்தில் கணவன் மனைவியாக இணைந்தனர்.
Praveen Dubey - Moon Dubey
பிரவீன் துபே – மூன் துபே
சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்த காதல் ஜோடி பிரவீன் துபே மற்றும் மூன் துபே. இவர்களது திருமணம் ராய்பூரில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்ரிச் நோர்ட்ஜே – மைக்கேலா க்ளூ
கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளி தோழியான மைக்கேலா க்ளூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரைமரி ஸ்கூல் ஆசிரியையான மைக்கேலா, ஆன்ரிச்சின் டீனேஜ் முதல் வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் வெற்றிகளின் மூலம் அவர்களது உறவை வளர்த்து வருகிறார்.
David Warner and Candice Warner
டேவிட் வார்னர் – கேண்டீஸ் வார்னர்
கடந்த 2013 ஆம் ஆண்டு வார்னர் மற்றும் கேண்டீஸ் இருவரும் முதல் முதலாக சந்தித்துள்ளனர். அதன் பிறகு நெருங்கி பழகியுள்ளனர். 2015 ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐவி மே, இண்டி ரே மற்றும் இஸ்லா ரோஸ் என்று 3 மகள்கள் இருக்கின்றனர்.