சொப்பன சுந்தரி உன்ன யாரு வச்சிருக்கா கதையா Delhi Capitals டீமை மாத்தி மாத்தி பந்தாடும் ஜிண்டால் & ஜிம்ஆர்
ஜிம்ஆர் குழுமம் தான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை நடத்தி வந்தது. அப்போது 2018இல் அந்த அணியின் 50 சதவீத பங்குகளை வாங்கினார் ஜிண்டால் சவுத் வெஸ்ட் (ஜேஎஸ்டபுள்யூ) குழுமத்தின் இயக்குனர் பார்த் ஜிண்டால்
ஜிம்ஆர் குழுமம் - ஜேஎஸ்டபுள்யூ இடையே ஒரு ஒப்பந்தம் அப்போது போடப்பட்டது. அதாவது மற்ற ஐபிஎல் அணிகளைப் போல உரிமையாளர்கள் ஒவ்வொரு முடிவையும் சேர்ந்து எடுக்காமல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருவர் அணியின் செயல்பாட்டை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும்
அடுத்த உரிமையாளர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அணியை கவனித்துக் கொள்ள வேண்டும். இதுதான் அந்த ஒப்பந்தம். வீரர்கள் தேர்வு, நிர்வாக ஆட்கள் தேர்வு, விளம்பர ஒப்பந்தம் வரை எல்லாமே யாருடைய கட்டுப்பாட்டில் அணி உள்ளதோ அவரே தான் எடுக்க வேண்டும்
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் டெல்லி அணி ஜிண்டால் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பார்த் ஜிண்டால் அணியை கவனித்து வந்தார். அவர் வந்த பின் தான் அணியில் பெயர் டெல்லி கேபிடல்ஸ் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது
ஜிண்டால் கட்டுப்பாட்டில் இருந்த டெல்லி அணி 2௦19ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பின் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 2020இல் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இது டெல்லி அணிக்கு பெரிய முன்னேற்றமாகும். ஆனால், இத்துடன் பார்த் ஜிண்டால் கட்டுப்பாட்டில் அணி விலகியது
தற்போது 2021 மற்றும் 2022 ஐபிஎல் சீசன்களை டெல்லி கேபிடல்ஸ் அணி ஜிம்ஆர் குழுமத்தின் கட்டுப்பாட்டில் சந்திக்க உள்ளது. ஜிண்டால் குழுமம் நல்ல இடத்தில் அணியை விட்டுச் சென்றுள்ள நிலையில், அதை ஜிஎம்ஆர் அப்படியே தொடர்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.