- Home
- Sports
- Sports Cricket
- அம்பயர் செய்தது தவறு! பிரீத்தி ஜிந்தா ஆவேசம்! DC vs PBKS போட்டியில் என்ன நடந்தது?
அம்பயர் செய்தது தவறு! பிரீத்தி ஜிந்தா ஆவேசம்! DC vs PBKS போட்டியில் என்ன நடந்தது?
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா நடுவரின் முடிவை கடுமையாக விமர்சித்தார். நேற்று பஞ்சாப் டெல்லி அணிகள் மோதிய போட்டியில் என்ன நடந்தது? என்பது குறித்து பார்ப்போம்.

IPL: Preity Zinta Criticized Umpire's Decision
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் நடிகை பிரீத்தி ஜிந்தா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவை விமர்சித்தார். சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் பாலிவுட் பிரபலங்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா, நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் 14வது ஓவரின் கடைசி பந்தில் சஷாங்க் சிங் அடித்த சிக்ஸரை நடுவர் மறுத்ததை கடுமையாக விமர்சித்தார்.
நடுவரின் முடிவை விமர்சித்த பிரீத்தி ஜிந்தா
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்ட பிரீத்தி ஜிந்தா, ஐபிஎல் போன்ற போட்டிகளில் மூன்றாவது நடுவரின் இதுபோன்ற தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறினார். எல்லைக்கோட்டில் சிக்ஸரைத் தடுத்த கரண் நாயரிடம் பேசியதாகவும், அது நிச்சயமாக சிக்ஸர் என்று அவர் உறுதிப்படுத்தியதாகவும் பிரீத்தி ஜிந்தா கூறினார்.
நடுவரின் தவறுகளை ஏற்றுக் கொள்ள முடியாது
"இவ்வளவு பெரிய போட்டியில், மூன்றாவது நடுவருக்கு இவ்வளவு தொழில்நுட்பம் இருக்கும்போது, இதுபோன்ற தவறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
நான் போட்டிக்குப் பிறகு கரணிடம் பேசினேன், அது நிச்சயமாக சிக்ஸர் என்று அவர் உறுதிப்படுத்தினார்" என்று பிரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே நேற்று நடந்த போட்டியின்போது இந்த சர்ச்சை எழுந்தது.
பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் போட்டியில் என்ன நடந்தது?
அதாவது பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தபோது 15வது ஓவரின் போது மோஹித் சர்மா வீசிய பந்தை ஷஷாங்க் சிங் துக்கி அடித்தார். அப்போது பவுண்டரி லைனில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் கருண் நாயர் அதை கேட்ச் பிடிக்க முயன்றபோது முடியாததால் சிக்சர் போக விடாமல் பந்தை கையால் மைதானத்தின் உள்ளே தள்ளினார்.
ஆனால் கருண் நாயர் பந்தை உள்ளே தள்ள கையால் தொட்டபோது அவரது கால் பவுண்டரி லைனில் உரசியது.
நடுவரின் முடிவால் அனைவரும் அதிர்ச்சி
ஆகையால் இது சிக்சர் என கருதப்பட்டது. தான் லைனில் கால் வைத்ததை உணர்ந்த கருண் நாயரும் நடுவர்ரிடம் சிக்சர் என சைகை காட்டினார். ஆனால் கள நடுவர் 3வது நடுவரின் முடிவுக்கு சென்றார். ரீப்ளேயில் கருண் நாயரின் கால் பவுண்டரி லைனில் உரசியது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.
ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும்விதமாக அது சிக்சர் இல்லை என்று 3வது நடுவர் அறிவித்தார். நடுவரின் இந்த முடிவை பார்த்து பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் மட்டுமல்ல டெல்லி வீரர் கருண் நாயரும் அதிர்ச்சி அடைந்தார்.