நான் தோத்தாலும் நீ ஜெயிச்சுட்ட நண்பா அது பயங்கர சந்தோசம் எனக்கு உன்ன நெனச்சு பெருமையா இருக்கு நட்டு:வார்னர்
First Published Dec 9, 2020, 1:35 PM IST
தற்போதைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களின் நாயகனாக போற்றப்படுபவர்களில் பௌலர் நடராஜனும் ஒருவர். பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் மட்டுமே அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக கடைசி ஒருநாள் போட்டியில் நடராஜன் விளையாடினார். இதன் மூலம் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி, டி20 போட்டி என அடுத்தடுத்து நடராஜனுக்கு ஆஸ்திரேலியத் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட நடராஜன் அணியில் அனைவரது அபிமானத்தையும் வென்றிருக்கிறார். அதிக ரன்கள் குவிக்கப்பட்ட இந்த டி20 தொடரில் நடராஜன் மிகக் குறைவான ரன்களையே கொடுத்து முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார். தொடர் நாயகனான ஹர்திக் பாண்டியாவே, தனது தொடர் நாயகன் தேர்வு நடராஜன்தான் என்று வாழ்த்தியுள்ளார்
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?