MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • CSK vs MI: மாஸ் கம்பேக் கொடுக்கும் தோனி?.. சிக்சர் மன்னனும் உள்ளே.. சிஎஸ்கே பிளேயிங் லெவன்!

CSK vs MI: மாஸ் கம்பேக் கொடுக்கும் தோனி?.. சிக்சர் மன்னனும் உள்ளே.. சிஎஸ்கே பிளேயிங் லெவன்!

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் பேட்டிங் மிக மோசமக உள்ளது. சஞ்சு சாம்சனும் தொடர்ச்சியான பார்ம் காட்டவில்லை. நன்றாக விளையாடி வந்த ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி விட்டார்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 23 2026, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே மோதல்
Image Credit : our own

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே மோதல்

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 2 வெற்றி மட்டுமே பெற்று 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் தலா ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சிஎஸ்கே அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மோதுகின்றன.

சிஎஸ்கே படுமோசம்

குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிரான போட்டியில், திலக் வர்மாவின் சதம் மற்றும் சிறப்பான பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. அந்த நம்பிக்கையுடன், சொந்த ஊரான வான்கடேவில் CSK-வை எதிர்கொள்கிறது. மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை அணி, மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்பில் உள்ளது.

24
இரு அணிகளுமே ஏமாற்றம்
Image Credit : Getty

இரு அணிகளுமே ஏமாற்றம்

கடந்த இரண்டு சீசன்களாக இந்த இரு அணிகளின் ஆட்டமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. 2024 சீசனில் இருந்து, MI மற்றும் CSK ஆகிய இரு அணிகளும் தலா 21 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளன. இது முதல் 10 அணிகளில் மிக அதிகமான தோல்விகளாகும். இந்த காலகட்டத்தில் MI 15 போட்டிகளிலும், CSK 13 போட்டிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. வெற்றி சதவீதத்தின் அடிப்படையில், புள்ளிப் பட்டியலில் MI ஒன்பதாவது இடத்திலும், CSK கடைசி இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் மாறி மாறி கடைசி இடத்தைப் பிடித்துள்ளன. 2023-ல் MI கடைசி இடத்தைப் பிடித்தது, அதே சமயம் கடந்த ஆண்டு CSK கடைசி இடத்தைப் பிடித்தது.

உர்வில் படேல் பிளேயிங் லெவனில்

இப்படி மோசமாக செயல்பட்ட போதிலும் இன்று இரு அணிகளும் மோதும் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் பேட்டிங் மிக மோசமக உள்ளது. சஞ்சு சாம்சனும் தொடர்ச்சியான பார்ம் காட்டவில்லை. நன்றாக விளையாடி வந்த ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி விட்டார். அவருக்கு பதிலாக மற்றொரு அதிரடி வீரர் உர்விர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
தோனி தான் இன்ஸ்பிரேஷன்.. KKR-ஐ கதறவிட்ட LSG-யின் இளம் அசுரன்.. யார் இந்த முகுல் செளத்ரி?
Related image2
MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!
34
தோனி விளையாடுவாரா?
Image Credit : X/@ChennaiIPL

தோனி விளையாடுவாரா?

காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வரும் தோனி, இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த போட்டியில் அவர் விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. தோனி களமிறங்குவது குறித்து போட்டி தொடங்குவதற்கு முன்பே முடிவு செய்யப்படும் என்று சிஎஸ்கே பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார். மற்றப்படி அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணி எப்படி?

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை தொடைத்தசைப் பிடிப்பு காரணமாக ரோஹித் சர்மா விளையாடுவது இன்னும் சந்தேகமாகவே உள்ளது. அவர் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியில் ஈடுபட்டாலும் அவர் களமிறங்குவது குறித்து போட்டிக்கு முன்பே முடிவு செய்யப்படும். அதே வேளையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ் இந்த சீசனில் முதன்முறையாக களமிறங்குகிறார்.

44
சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் பிளேயிங் லெவன்
Image Credit : ANI

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் பிளேயிங் லெவன்

சிஎஸ்கே பிளேயிங் லெவன்: ருத்ராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன், உர்வில் படேல், டெவால்ட் ப்ரீவிஸ், சர்பராஸ் கான், ஷிவம் துபே, மேத்யூ ஷார்ட் அல்லது எம்எஸ் தோனி, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, முகேஷ் சிங் சௌத்ரி அல்லது மேட் ஹென்றி அல்லது அகேல் ஹொசைன், குர்ஜிபித் சிங்.

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், நமன் திர், திலக் வர்மா, வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னர், ஏஎம் கசன்ஃபர், கிரிஷ் பகத், ஜஸ்பிரித் பும்ரா, அஷ்வனி குமார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
எம். எஸ். தோனி சி.எஸ்.கே
சிஎஸ்கே

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை! மேக்ஸ்வெல் ரெக்கார்டு ஊதி தள்ளிய 15 வயதான இளம் வீரர் வைபவ்!
Recommended image2
Most T20 Centuries: டி20-ல் அதிக சதம்..! கோலியின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்..!
Recommended image3
Abhishek Sharma: டெல்லிக்கு தண்ணி காட்டிய அபிஷேக் சர்மா.. 10 சிக்ஸர்களுடன் செஞ்சுரி..!
Related Stories
Recommended image1
தோனி தான் இன்ஸ்பிரேஷன்.. KKR-ஐ கதறவிட்ட LSG-யின் இளம் அசுரன்.. யார் இந்த முகுல் செளத்ரி?
Recommended image2
MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved