தோனி, கோலியே அடிக்க பயப்படும் சுனில் நரைன் ஓவரை பதம் பார்த்த ஒரே ஒரு சிஎஸ்கே பிளேயர் சுரேஷ் ரெய்னா!
சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைனைக்கு எதிராக எம்.எஸ்.தோனி ஒரு சிக்ஸர் கூட விளாசியது அல்ல. ஆனால் சுரேஷ் ரெய்னா நரைன் பந்தில் அதிரடியாக விளாடி அசத்தினார். 2019 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - கேகேஆர் போட்டியில் நரைன் பந்தில் ரெய்னா அடித்த பவுண்டரிகள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
Suresh Raina, Chennai Super Kings - IPL 2019
சுனில் நரைன் எவ்வளவு பெரிய பிளேயர் என்று அனைவருக்கும் தெரியும். சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைனைக்கு எதிராக எம்.எஸ்.தோனி ஒரு சிக்ஸர் கூட விளாசியது அல்ல. ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருக்கிறார். அப்படிப்பட்ட தரமான பவுலரான சுனில் நரைனைப் பார்த்து பயப்படாத பேட்ஸ்மேனே இருக்க முடியாது.
Suresh Raina vs Sunil Narine
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி கூட் நரைன் பந்தில் திணறத் தான் செய்வார். ஆனால், அப்படிப்பட்ட பவுலரை கதற வைத்த இந்திய பிளேயர் ஒருவர் இருந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அது தான் உண்மை. அப்படிப்பட்ட ஒரு பேட்ஸ்மேன் தான் சுரேஷ் ரெய்னா.
Suresh Raina
கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 29ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கேகேஆர் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக கிறிஸ் லின் 82 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணியைப் பொறுத்த வரையில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
CSK vs KKR, Sunil Narine vs Suresh Raina
பின்னர் 162 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சிஎஸ்கே விளையாடியது. இதில் ஷேன் வாட்சன் 6, ஃபாப் டூப்ளெசிஸ் 24 என்று சொற்ப ரன்களில் வெளியேறினர். அம்பத்தி ராயுடு 5, தோனி 16 ரன்களில் ஆட்டமிழக்க சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அதிரடியாக விளையாடினர்.
Suresh Raina vs Sunil Narine
இதில், சுனில் நரைன் ஓவரில் மட்டும் சுரேஷ் ரெய்னா அடுத்தடுத்து பவுண்டரி விளாசி அதிர வைத்தார். கடைசியாக இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சுரேஷ் ரெய்னா ஸ்டைலிஷ் பிளேயர் ஆப் தி மேட்ச் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.