MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சிஎஸ்கே பலம் என்ன? பலவீனம் என்ன? தோனி எந்த இடத்தில் பேட்டிங்? பிளேயிங் லெவன் இதோ!

சிஎஸ்கே பலம் என்ன? பலவீனம் என்ன? தோனி எந்த இடத்தில் பேட்டிங்? பிளேயிங் லெவன் இதோ!

CSK  IPL 2026 strengths weaknesses: லீக்கில் உள்ள மற்ற சில அணிகளுடன் ஒப்பிடும்போது பந்துவீச்சுத் தாக்குதல் இன்னும் சற்று பலவீனமாகவே தெரிகிறது. மேட் ஹென்றியின் வருகை அணிக்கு அனுபவத்தைக் கொண்டுவருகிறது, 

2 Min read
Author : Rayar r
Published : Mar 25 2026, 06:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 2026
Image Credit : our own

ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா மார்ச் 28ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஸ்கே, கடந்த இரண்டு சீசன்களிலும் சொதப்பி விட்டது. அதுவும் ஐபிஎல் 2025 சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து மோசமான நிலையை அடைந்தது. ஆனால் கசப்புகளை மறந்து விட்டு ஐபிஎல் 2026 சீசனில் மீண்டும் கோப்பையை தூக்க சிஸ்கே ஆயத்தமாக உள்ளது.

24
சிஎஸ்கே பலம்
Image Credit : Instagram

சிஎஸ்கே பலம்

சிஎஸ்கே அணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம். இந்த சீசனில் சிஎஸ்கே-வின் பேட்டிங் வரிசை மிகவும் வலுவாக உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக நிலைத்தன்மையையும் அதிரடியையும் வழங்குகிறார்கள், அதே நேரத்தில் ஆயுஷ் மத்ரே மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறார். 

டெவால்ட் பிரெவெஸ் சிவம் துபேயின் அதிரடி ஆட்டமும், பிரசாந்த் வீர் போன்ற இளம் வீரர்களின் நம்பிக்கையும் அணிக்கு வலு சேர்க்கின்றன. பவுலிங்கில் நூர் அகமது, கலீல் அகமது ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள். மேலும் தோனியின் அனுபவமும், அவருடைய புத்திசாலித்தனும் அணிக்கு பயனுள்ளவையாக இருக்கும்.

Related Articles

Related image1
ஐபிஎல்லுக்கு குட்பை சொல்லும் தோனி.. சிஎஸ்கே கேப்டன்சியிலும் வரப்போகும் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்!
Related image2
தளபதிக்காக சிஎஸ்கே நிர்வாகத்துடன் மோதிய தோனி.. கண்டிஷனால் கடும் கோபம்.. கூல் கேப்டன் பொறுமையிழந்தது ஏன்?
34
சிஎஸ்கே பலவீனம் இதுதான்
Image Credit : Getty

சிஎஸ்கே பலவீனம் இதுதான்

சிஎஸ்கே அணியின் பவுலிங் சற்று பலவீனமாகத் தெரிகிறது. மதீஷா பதிரனா மற்றும் சாம் கரண் இல்லாததால் வேகப்பந்து வீச்சு பலம் குறைவாக உள்ளது. கலீல் அகமது , முகேஷ் சௌத்ரி, ஸ்பென்ஷர் ஜான்சன், மேட் ஹென்ரி போன்ற வீரர்கள் நம்பிக்கையளித்தாலும், லீக்கில் உள்ள மற்ற சில அணிகளுடன் ஒப்பிடும்போது பந்துவீச்சுத் தாக்குதல் இன்னும் சற்று பலவீனமாகவே தெரிகிறது. 

மேட் ஹென்றியின் வருகை அணிக்கு அனுபவத்தைக் கொண்டுவருகிறது, ஆனால் அவர் சிஎஸ்கே அணியின் அமைப்புடன் எவ்வாறு பொருந்தி, சேப்பாக்கின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதேபோல் ருத்ராஜ் கேப்டன்சியில் இந்த முறை தனித்து சிறப்பாக செயல்படுவாரா? என்ற கவலையும் எழுந்துள்ளது.

44
தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்வார்?
Image Credit : Getty

தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்வார்?

தோனி கடந்த சீசனை போல் இந்த முறையும் 7 அல்லது 8-வது இடத்தில் ஒரு 'பினிஷராக' களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அவரை பெரும்பாலும் Impact Player-ஆக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்பார் என்பதால், தோனி கடைசி 2-3 ஓவர்களில் பினிஷிங் ரோல் செய்ய முயற்சிப்பார்.

சிஎஸ்கே பிளேயிங் லெவன்

ருத்ராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரெவெஸ், ஷிவம் துபே, சர்ஃபராஸ் கான், பிரசாந்த் வீர், எம்.எஸ். தோனி, ராகுல் சாஹர், மாட் ஹென்றி, கலீல் அகமது மற்றும் அகேல் ஹொசைன்

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
சிஎஸ்கே
விளையாட்டு
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை.. ஸ்லீவ்லெஸ் ஜெர்சிக்குத் தடை.. பிசிசிஐ 'கறார்' விதிகள்
Recommended image2
ஐபிஎல் வரலாற்றை மாற்றி எழுதிய ராஜஸ்தான் ராயல்ஸ்.. ரூ.15,300 கோடிக்கு விற்பனை.. புதிய ஓனர் யார் தெரியுமா?
Recommended image3
Rinku Singh: கிரிக்கெட்டர் ரிங்கு சிங்குக்கு அரசு வேலை! ஸ்பெஷல் ஆபீசராக நியமித்த முதல்வர்
Related Stories
Recommended image1
ஐபிஎல்லுக்கு குட்பை சொல்லும் தோனி.. சிஎஸ்கே கேப்டன்சியிலும் வரப்போகும் மாற்றம்.. ரசிகர்கள் ஷாக்!
Recommended image2
தளபதிக்காக சிஎஸ்கே நிர்வாகத்துடன் மோதிய தோனி.. கண்டிஷனால் கடும் கோபம்.. கூல் கேப்டன் பொறுமையிழந்தது ஏன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved