IPL 2023:சிஎஸ்கே -சன்ரைசர்ஸ் ஹைதரபாத் பலப்பரீட்சை! சேப்பாக்கத்தில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் நன்றாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகின்றன.
சன்ரைசர்ஸ் அணி வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்த நிலையில், இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி உள்ளது. எனவே இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது சன்ரைசர்ஸ் அணி. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச சிஎஸ்கே அணி:
டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரனா, ஆகாஷ் சிங்.
உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
ஹாரி ப்ரூக், மயன்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அடில் ரஷீத், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், மயன்க் மார்கண்டே.