- Home
- Sports
- Sports Cricket
- சாம்பியன்ஸ் டிராபி! அணியில் இருந்து 2 முக்கிய தூண்கள் விலகல் - தாக்குபிடிக்குமா இந்தியா?
சாம்பியன்ஸ் டிராபி! அணியில் இருந்து 2 முக்கிய தூண்கள் விலகல் - தாக்குபிடிக்குமா இந்தியா?
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பந்துவீச்சு, பேட்டிங் என இரு பிரிவிலும் முன்னணியில் உள்ள 2 வீரர்கள் தொடரில் இருந்து விலகி உள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி! அணியில் இருந்து 2 முக்கிய தூண்கள் விலகல் - தாக்குபிடிக்குமா இந்தியா?
சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ செவ்வாய்க்கிழமை இரவு உறுதி செய்தது. அவரது உடற்தகுதி நிலைக்காக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் இறுதியாக போட்டியிலிருந்து விலகுவது உறுதி செய்யப்பட்டது. இறுதி 15 பேர் கொண்ட அணியில் பும்ராவுக்கு பதிலாக 23 வயதான ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார். மற்றொரு தேர்வு திருப்பத்தில், இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இறுதி அணியில் இருந்து வெளியேறினார், அவருக்கு பதிலாக 33 வயதான சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025
"வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் முதுகு காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். ஆண்கள் தேர்வுக் குழு பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை நியமித்துள்ளது. மேலும் மற்றொரு இளம் பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியையும் அணியில் சேர்த்துள்ளதாக” பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பும்ரா விலகல்
முன்னதாக பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது முதுகில் காயம் ஏற்பட்டதால், பும்ரா ஐந்து வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் அறிவுறுத்தினார். இருப்பினும், பும்ராவால் சரியான நேரத்தில் காயத்தில் இருந்து மீள முடியவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார், அவர் இரண்டு ஆட்டங்களில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தொடரில் இருந்து விலகிய ஜெய்ஸ்வால்
உலகத்தர பேட்ஸ்மேன்களை மிரட்டும் திரன் படைத்த பும்ரா அணியில் இடம் பெறாததும், இளம் வீரராக எதிரணி பௌலர்களை மிரட்டும் இந்திய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெறாததும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும் ரோஹித் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் வலுவாக உள்ளது.
பிசிசிஐ அறிவித்துள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (WK), ரிஷப் பண்ட் (WK), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி.