MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஆஸ்திரேலியாவை அலறவிட்ட பும்ரா: தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்தல்

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட பும்ரா: தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்தல்

ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தரவரிசைப்பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Nov 28 2024, 08:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ICC Ranking

ICC Ranking

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அண்மையில் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ICC வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பல முன்னணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் தரவரிசைப்பட்டியலிலும் பல வீரர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர்.

25
ICC Ranking

ICC Ranking

முதல் இடத்தில் பும்ரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் இந்திய அணியை வழிநடத்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (Jasprit Bumrah) முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை திக்குமுக்காட வைத்தார். இந்த இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி வெறும் 104 ரன்களுக்குள் சுருண்டது. இரண்டாவது இன்னிங்சிலும் தனது அதிரடி தாக்குதலை வெளிப்படுத்திய பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

8 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து தென்னாப்பிரிகா வீரர் ரபாடா 2வது இடத்திலும், ஹேசில்வுட் 3வது இடத்திலும், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா முறையே 4, 7வது இடத்தில் உள்ளனர்.

35
ICC Ranking

ICC Ranking

அதிரடி மன்னன் ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது இன்னிங்சில் ரன் எதுவும் சேர்க்காத நிலையில், இரண்டாவது இன்னிங்சில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 161 ரன்கள் அடித்து எதிரணி பௌலர்களை அலறவிட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 2 இடங்கள் முன்னேறி பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 

பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் ரிஷப் பண்ட் (Rishabh Pant) 6வது இடத்திலும், முதல் போட்டியில் சதம் விளாசிய ரன்மெஷின் விராட் கோலி (Virat Kohli) 9 இடங்கள் முன்னேறி 13வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

45
ICC Ranking

ICC Ranking

டெஸ்ட் ஆல் - ரவுண்டர்

ஆல் - ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 423 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் அவரைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் 290 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், அக்சர் படேல் 239 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளனர். 

55
ICC Ranking

ICC Ranking

முதல் இடத்தில் இந்தியா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship 2025) தொடரில் இந்திய அணி மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்ததைத் தொடர்ந்து இந்திய அணி சிறந்த முன்னேற்றத்தை எட்டி உள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் செய்திகள்
விராட் கோலி
Latest Videos
Recommended Stories
Recommended image1
கேப்டன் பதவியால் வந்த கோபமா? லைவ் மேட்ச்சில் ரோஹித் ஷர்மா செய்த காரியம் - மிரண்டு போன ரசிகர்கள்!
Recommended image2
IPL 2026: RCB vs SRH முதல் மேட்ச்! பெங்களூருவில் ஜெயிக்கப் போவது யார்?
Recommended image3
IPL Records: ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை.. IPL வரலாற்றையே மிரள வைத்த ஒரே ஒரு பவுலர்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved