- Home
- Sports
- Sports Cricket
- 17 வயதில் சிஎஸ்கேயில் அறிமுகமான ஆயுஷ் மாத்ரே – தோனியை மிரள வைத்த இந்த இளம் வீரர் யார்?
17 வயதில் சிஎஸ்கேயில் அறிமுகமான ஆயுஷ் மாத்ரே – தோனியை மிரள வைத்த இந்த இளம் வீரர் யார்?
Ayush Mhatre Debut for CSK in IPL 2025 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 17 வயதான இளம் வீரர் ஆயுத் மாத்ரே அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி தோனியை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பவுலிங்:
Ayush Mhatre Debut for CSK in IPL 2025 : ஐபிஎல் 2025 தொடரில் முக்கியமான போட்டியாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ஷேக் ரஷீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ரச்சின் ரவீந்திரா சொதப்பல்
இதில், ரச்சின் ரவீந்திரா தொடக்க முதலே தடுமாற அஸ்வினி குமார் பந்தில் 5 ரன்களுக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு தான் 17 வயது 278 நாட்களே ஆன இளம் வீரர் ஆயுத் மாத்ரே சிஎஸ்கே அணியில் களமிறங்கினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுத்த ஆயுத் மாத்ரே 2ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 3ஆவது மற்றும் 4ஆவது பந்துகளில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசினார்.
சிஎஸ்கேயில் அறிமுகமான 17 வயது இளம் வீரர் ஆயுத் மாத்ரே:
இதையடுத்து அவர் 4, 4, 4 என்று ரன்கள் எடுத்த நிலையில் இந்தப் போட்டியில் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆயுத் மாத்ரே பேட்டிங் செய்தை டிரெஸிங் ரூமில் இருந்து தோனி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகம் செய்யப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்து முதல் அதிரடியாக விளையாடினார். அவரை போன்று இன்று சிஎஸ்கே அணியில் ஆயுஷ் மாத்ரே அறிமுகம் செய்யப்பட்டார்.
ராகுல் திரிபாதிக்கு பதில் சிஎஸ்கேயில் அறிமுகம்:
சிஎஸ்கேயில் அணியில் ரூ.3.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ராகுல் திரிபாதிக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.30 லட்சம் அடிப்படை விலைக்கு இணைந்தார். அவர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
இளம் வயதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இணைந்த டாப் 5 வீரர்கள்:
1. ஆயுஷ் மாத்ரே - 17 வயது, 278 நாட்கள்
2. அபினவ் முகுந்த் - 18 வயது, 139 நாட்கள்
3. அங்கித் ராஜ்பூட் - 19 வயது, 123 நாட்கள்
4. மதீஷா பதிரானா - 19 வயது, 148 நாட்கள்
5. நூர் அகமது - 20 வயது, 79 நாட்கள்
யார் இந்த ஆயூஷ் மாத்ரே?
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி பிறந்தார். தனது 17 வயதி 2024 -2025 ஆம் ஆண்டுக்கான இரானி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக மாத்ரே விளையாடினார். சிறிது நாட்களுக்கு பிறகு ரஞ்சி டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக மும்பை அணிக்காக விளையாடி 176 ரன்கள் எடுத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 150 ரன்களுக்கு அதிகமாக ரன்கள் எடுத்த இளம் வீரர் என்ற சாதனையை மாத்ரே படைத்தார். இதற்கு முன்னதாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் அந்த சாதனையை படைத்திருந்தார். அதனை மாத்ரே முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
மாத்ரே பேட்டிங்கால் மகிழ்ந்த தோனி:
இந்த போட்டியில் மாத்ரே பேட்டிங் செய்து அதிரடியாக 4, 6, 6 அடிப்பதை டிரெஸிங் ரூமில் அமர்ந்திருந்த தோனி பார்த்து மகிழ்ந்தார். இனி வரும் போட்டிகளில் மாத்ரேவிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.