ஸ்மித் அதிரடி சதம்; மேக்ஸ்வெல் காட்டடி! ODI வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக 3வது அதிகபட்ச ஸ்கோரை அடித்த ஆஸி.,
First Published Nov 29, 2020, 1:45 PM IST
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஐம்பது ஓவரில் 389 ரன்களை குவித்து 390 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

வார்னர் மற்றும் ஃபின்ச் ஆகிய இருவரும் கடந்த போட்டியை போலவே அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், முதல் விக்கெட்டுக்கு 23 ஓவரி 142 ரன்களை குவித்தனர். ஃபின்ச் 60 ரன்களில் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிய வார்னர், 83 ரன்களுக்கு ஷ்ரேயாஸ் ஐயரின் துல்லியமான த்ரோவால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?