#AUSvsIND கடைசி வரை கொண்டுவந்து கைவிட்ட கோலி..! கடைசி டி20யில் ஆஸி., ஆறுதல் வெற்றி
First Published Dec 8, 2020, 5:42 PM IST
இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்ற நிலையில், கடைசி டி20 போட்டி சிட்னியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபின்ச் 2வது ஓவரிலேயே வாஷிங்டன் சுந்தரின் பந்தில் டக் அவுட்டானார். இதையடுத்து களத்திற்கு வந்த ஸ்மித், பந்துக்கு நிகரான ரன் அடித்து(23 பந்தில் 24 ரன்கள்) வாஷிங்டன் சுந்தரின் பவுலிங்கில் நடையை கட்டினார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?