MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS: 3வது டெஸ்ட்டில் இந்திய அணியை ஈசியா வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி.. ஆட்டநாயகன் நேதன் லயன்

IND vs AUS: 3வது டெஸ்ட்டில் இந்திய அணியை ஈசியா வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி.. ஆட்டநாயகன் நேதன் லயன்

இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.  

3 Min read
Author : karthikeyan V
| Updated : Mar 03 2023, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளிலும் தலா 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்திய அணியில் ராகுல் மற்றும் ஷமிக்கு பதிலாக முறையே கில் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.  ஆஸ்திரேலிய அணியில் டேவிட்  வார்னர் மற்றும் பாட் கம்மின்ஸுக்கு பதிலாக கேமரூன் க்ரீன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் ஆடினர்.
 

311

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
 

புஜாராவை அவுட்டாக்கியது நேதன் லயன் இல்ல; ரோஹித் சர்மா தான்..! இந்தியா தோற்றால் நீங்கதான் காரணம் ரோஹித்

411

ஆஸ்திரேலிய அணி:

உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் க்ரின், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, மேத்யூ குன்னெமன்.
 

511

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென இந்திய வீரர்கள் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா(12), கில்(21), புஜாரா(1), கோலி(22), ஜடேஜா(4), ஷ்ரேயாஸ் ஐயர்(0), பரத்(17), அக்ஸர்(12) என அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் முதல் இன்னிங்ஸில் வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி.

611

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் டாப் வீரர்களான டிராவிஸ் ஹெட் (9), உஸ்மான் கவாஜா(60), லபுஷேன்(31) மற்றும் ஸ்மித் ஆகிய நால்வரையும் முதல் நாள் ஆட்டத்திலேயே ஜடேஜா வீழ்த்த 146 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்திருந்தது. 

ஏம்ப்பா ரோஹித், உனக்கு அறிவு இருக்கா இல்லையா..? ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை கிழி கிழினு கிழித்த கவாஸ்கர்

711

2ம் நாளான நேற்றைய ஆட்டத்தை ஹேண்ட்ஸ்கம்ப்பும் கேமரூன் க்ரீனும் தொடர்ந்தனர். இருவரும் வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதால் முதல் ஒரு மணி நேரம் முழுவதுமாக இடது கை ஸ்பின்னர்களான ஜடேஜா மற்றும் அக்ஸர் படேலை வீசவைத்தார் கேப்டன் ரோஹித். ஆனால் அவர்களால் விக்கெட் வீழ்த்த முடியாத நிலையில், ஒரு மணி நேரத்திற்கு அஷ்வினை அழக்க, ஹேண்ட்ஸ்கம்ப்பின் விக்கெட்டை அஷ்வின் 5வது விக்கெட்டாக வீழ்த்த, அடுத்த 5 விக்கெட்டுகளும் அடுத்த 11 ரன்களுக்குள் விழ 197 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது.
 

811

88 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ரோஹித் சர்மா(12), கில்(5), கோலி(13), ஜடேஜா(7) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு மளமளவென ஆட்டமிழந்தனர். 5வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடி 27 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி நம்பிக்கையளித்த நிலையில் அவரும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேஎஸ் பரத்(3), அஷ்வின்(16) ஆகியோரும் சோபிக்கவில்லை. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று தனி நபராக போராடி அரைசதம் அடித்த புஜாரா 59 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அக்ஸர் படேல் 15 ரன்கள் அடிக்க, 2வது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி.
 

911

அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் சீனியர் ஸ்பின்னர் நேதன் லயன், ரோஹித், கில், புஜாரா, ஜடேஜா, பரத், அஷ்வின், உமேஷ் யாதவ், சிராஜ் ஆகிய 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது சுழலில் வெறும் 163 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.

1011

75 ரன்கள் மட்டுமே இந்திய அணி முன்னிலை பெற்ற நிலையில், 76 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா ரன்னே அடிக்காமல் முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் டிராவிஸ் ஹெட்டும் மார்னஸ் லபுஷேன் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி இலக்கை அடிக்க, 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை நேதன் லயன் வென்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்ட் ஸ்பின்னர்கள் முரளிதரன், ஷேன் வார்ன் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த நேதன் லயன்

1111

ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் இந்திய அணியை வீழ்த்துவது மிகக்கடினம். ஆனால் ஆஸ்திரேலிய அணி சிறப்பான பேட்டிங்கின் மூலம் இந்தியாவை எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர் 2-1 என உள்ளது.
 

About the Author

KV
karthikeyan V
ரோகித் சர்மா
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(9.0 ov)82/2
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 69 runs in 66 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(97.4 ov)356/2
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL : தோனி முதல் ஸ்டார்க் வரை... 10 ஐபிஎல் அணிகள் கழட்டிவிட்ட பிளேயர்கள் யார்... யார்? முழு பட்டியல் இதோ
Recommended image2
MS Dhoni : தமிழ்நாட்டில் கிரிக்கெட்டில் ஹிட் அடித்த தோனி... சினிமாவில் பிளாப் ஆன கதை தெரியுமா?
Recommended image3
MS Dhoni: ஒரு சிக்ஸர்... ஆயிரம் உணர்வுகள்! தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்குப் பின்னால் இருக்கும் கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved