- Home
- Sports
- Sports Cricket
- சிஎஸ்கே கொடுத்த அழுத்தம்.. கைவிரித்த தோனி.. அஸ்வின் ஓய்வுக்கு இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்!
சிஎஸ்கே கொடுத்த அழுத்தம்.. கைவிரித்த தோனி.. அஸ்வின் ஓய்வுக்கு இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்!
ஐபிஎல் தொடரில் இருந்து சிஸ்கே வீரர் அஸ்வின் ஓய்வு பெற்றதற்கு சிஸ்கே நிர்வாகமும், தோனியும் தான் காரணம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Ashwin Quits IPL: CSK Pressure And Dhoni's Big Call
சிஎஸ்கே அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார். ஒவ்வொரு முடிவிலும் ஒரு புதிய துவக்கம் இருக்கும் என்று சொல்வார்கள். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது பயணம் இன்றுடன் முடிவடைகிறது என்று தெரிவித்த அவர் பல்வேறு லீக்குகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் விளையாடிய ஐபிஎல் அணிகளுக்கும், பிசிசிஐக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அஸ்வினின் ஐபிஎல் ஓய்வால் ரசிகர்கள் அதிர்ச்சி
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், ஐபிஎல்லில் அடுத்த சீசன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த அவர் சிஎஸ்கேவில் விளையாடுவது எனக்கு பெருமையளிக்கிறது என்று கூறிவந்த நிலையில், திடீரென ஓய்வு பெற்றுள்ளது சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சீசனில் சொதப்பிய அஸ்வின்
கடந்த ஐபிஎல் சீசனில் படுமோசமாக விளையாடிய சிஎஸ்கே அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து மோசமான நிலையை சந்தித்தது. கூல் கேப்டன் தோனி இருந்தபோதும் அவரால் பேட்டிங்கிலும், கேப்டன்சியிலும் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. இதேபோல் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சிஸ்கேவில் கால்பதித்த அஸ்வினும் கடந்த சீசனில் பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் சொதப்பினார். ஒன்பது போட்டிகளில் விளையாடிய அஸ்வின் ஏழு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். அவரது ஓவரில் சர்வசாதாரணமாக ரன்கள் சென்றன.
சிஸ்கே கொடுத்த அழுத்தம்
சுமார் 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வின், மோசமாக விளையாடியதால் சிஸ்கே அணி நிர்வாகம் அதிருப்தி அடைந்தது. இதனால் அடுத்த சீசனில் மூத்த வீரர்களை கழட்டி விட்டு இளம் வீரர்களுடன் புதிய அணியை கட்டமைக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் அடுத்த சீசனில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என மூத்த வீரர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி அணியில் இளம் வீரர்களை கட்டமைப்பதில் தோனியும் உறுதியாக இருந்தார்.
முன்கூட்டியே சுதாரித்து முடிவெடுத்த அஸ்வின்
மேலும் அஸ்வினை ராஜஸ்தான் அணியிடம் கொடுத்து விட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வர சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆகவே அணியில் தனது இடம் பறிபோகிறது என்பதை உணர்ந்த அஸ்வின், ஐபிஎல் 2026 சீசனில் விளையாடப் போவதில்லை. அடுத்த ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு அணியிலிருந்து விடுவிக்குமாறு சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.