IPL 2023:மும்பைக்காக அறிமுகமான அர்ஜூன் டெண்டுல்கர்:ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அப்பாவும், மகனும் ஒரே டீம்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகமாகியுள்ளார்.
அர்ஜூன் டெண்டுல்கர்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 22ஆவது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்தப் போட்டியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணி மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகமாகியுள்ளார்.
அர்ஜூன் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் மொத்தமாக 78 போட்டிகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
அர்ஜூன் டெண்டுல்கர்
தற்போது சச்சின் டெண்டுல்கரைத் தொடர்ந்து அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமாகியுள்ளார். மும்பையில் பிறந்த அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மும்பையில் நடக்கும் போட்டியில் மூலமாக ஐபிஎல் 2023 கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.
அர்ஜூன் டெண்டுல்கர்
இதுவரையில் ஃபர்ஸ்ட் கிளாஸ், லிஸ்ட் ஏ, டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்து அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய போட்டியின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். இதுவரையில் 7 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடிய அர்ஜூன் இன்னிங்ஸில் 223 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 120 ரன்கள் எடுத்துள்ளார்.
அர்ஜூன் டெண்டுல்கர்
இதே போன்று லிஸ்ட் ஏ போட்டியில் 7 போட்டிகளில் 3 இன்னிங்ஸில் விளையாடி 25 ரன்கள் எடுத்துள்ளார். ஒன்பது டி20 போட்டிகளில் 20 ரன்கள் எடுத்துள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரான அர்ஜூன் பந்து வீச்சில் ஃபர்ஸ்ட் கிளாசில் 12 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 12 விக்கெட்டும், லிஸ்ட் ஏ போட்டியில் 8 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் கோவா அணியில் இடம் பெற்று 7 போட்டிகளில் 223 ரன்கள் உள்பட 12 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார்.
அர்ஜூன் டெண்டுல்கர்
ஐபிஎல் 2023:
கடந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.30 லட்சத்தில் ஏலத்தில் எடுத்தது. ஆனால், அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை.
அர்ஜூன் டெண்டுல்கர்
தற்போது நடப்பு ஆண்டின் 16ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த 3 போட்டிகளிலும் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெறவில்லை.
அர்ஜூன் டெண்டுல்கர்
தற்போது நடப்பு ஆண்டின் 16ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த 3 போட்டிகளிலும் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெறவில்லை.
அர்ஜூன் டெண்டுல்கர்
முதல் ஓவரில் மட்டும், அவர் 5 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதையடுத்து 3 ஆவது ஓவரை வீசினார். அதில், வைடு உள்பட 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார். 2 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் அவர் 17 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதன் பிறகு அவர் பந்து வீச வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜூன் டெண்டுல்கர்
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் அறிமுகமான அர்ஜூன் டெண்டுல்கருக்கு ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்பை கொடுத்தார்.
அர்ஜூன் டெண்டுல்கர்
இதே போன்று ரோகித் சர்மா இந்திய அணியில் அறிமுகமான போது அவருக்கான கேப்பை சச்சின் டெண்டுல்கர் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜூன் டெண்டுல்கர்
தனது தம்பி அர்ஜூன் டெண்டுல்கர் முதல் ஓவர் வீசுவைக் கண்டு அவருக்கு ஆதரவும், வாழ்த்தும் தெரிவிக்க சாரா சச்சின் டெண்டுல்கர் மும்பை வான்கடே மைதானத்திற்கு வந்துள்ளார்.