பொண்டாட்டி, புள்ள தான் முக்கியம்; இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகிய ஆஸி.,வீரர்! மாற்றுவீரர் அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. முதலில் ஒருநாள் மற்றும் டி20 தொடரும் பின்னர் டெஸ்ட் தொடரும் நடக்கவுள்ளது.
இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், தனக்கு குழந்தை பிறந்திருப்பதால், குழந்தை மற்றும் மனைவியுடன் இருக்க விரும்பும் ஃபாஸ்ட் பவுலர் கேன் ரிச்சர்ட்ஸன், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து விலகியுள்ளார். அதனால் தான் அவர் ஐபிஎல்லிலும் ஆடவில்லை.
இந்நிலையில், உடனடியாக கேன் ரிச்சர்ட்ஸனுக்கு மாற்று வீரராக ஆண்ட்ரூ டை அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி:
ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), சீன் அபாட், அஷ்டன் அகார், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ்(துணை கேப்டன்), கேமரூன் க்ரீன், ஹேசில்வுட், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லபுஷேன், மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.