- Home
- Sports
- Sports Cricket
- சிஎஸ்கே போட்டியை கண்டு ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் – கோலிவுட் கோட்டையாக மாறிய சேப்பாக்கம்!
சிஎஸ்கே போட்டியை கண்டு ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் – கோலிவுட் கோட்டையாக மாறிய சேப்பாக்கம்!
Ajith Kumar and Sivakarthikeyan Watch CSK vs SRH IPL 2025 Match : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் CSK vs SRH போட்டியை பார்க்க அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரில் வந்துள்ளனர்.

Mohammed Shami. (Photo- IPL)
Ajith Kumar and Sivakarthikeyan Watch CSK vs SRH IPL 2025 Match : சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி தற்போது சொந்த மைதானமான சென்னையில் நடைபெற்று வருகிறது. இதுவரையில் விளையாடிய 8 போட்டிகளில் 2ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே 10ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று 2 வெற்றி, 6 தோல்விகளுடன் சன்ரைசர்ஸ் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி. இரு அணிகளும் அதிரடி மாற்றங்களுடன் இந்தப் போட்டியில் விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்வதாக அறிவித்தார். ஹைதராபாத் அணியில் கமிந்து மெண்டிஸ் இடம் பெற்றுள்ளார்.
இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்திரா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டெவால்ட் பிரேவிஸ் இந்தப் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். இதே போன்று விஜய் சங்கருக்கு பதிலாக தீபக் கூடா சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு தொடக்கம் நன்றாக இருந்தாலும் பினிஷிங் ஒன்றும் சரியில்லை. முதலில் விளையாடிய சிஎஸ்கே 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக அறிமுக வீரர டெவால்ட் பிரேவிஸ் அதிரடியாக விளியாடி 25 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட42 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் எடுத்துள்ளார். அணியின் கேப்டனான தோனி 10 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் தான் இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசிப்பதற்காக அஜித் தனது மனைவி ஷாலினி மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் வந்து கண்டு ரசித்துள்ளார். ஷாலியின் சகோதரரான ரிச்சர்டும் போட்டியை பார்க்க வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், போட்டியில் டெவால்ட் பிரேவிஸ் விளையாடிக் கொண்டிருந்த போது அஜித் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அஜித் மட்டுமின்றி சிவகார்த்திகேயனும் வருகை தந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் அஜித் இருவரும் அருகருகில் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்துள்ளனர். அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லீ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதுவரையில் ரூ.248 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. இதுஒரு புறம் இருக்க அஜித் மற்றும் ஷாலினி இருவரும் தங்களது 25ஆவது ஆண்டு திருமண நாளை நேற்று கேக் வெட்டி கொண்டாடி மகிழந்தனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் மதராஸி படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதே போன்று பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.