சிஎஸ்கே வரலாற்றில் 200 ரன்களை கடந்து எவர் ஒருவரும் செய்யாத சாதனையை படைத்த அஜின்க்யா ரஹானே!
சிஎஸ்கே வரலாற்றில் அந்த அணியில் அறிமுகமானதிலிருந்து அதிவேகமாக 200 ரன்களை கடந்து அஜின்க்யா ரஹானே சாதனை படைத்துள்ளார்.
அஜின்க்யா ரஹானே
ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 16ஆவது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த சீசனில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பெற்றுள்ளது.
அஜின்க்யா ரஹானே
இதுவரையில் விளையாடிய 7 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. முதல் 2 போட்டிகளில் சென்னை அணியில் இடம் பெற்று விளையாடாத ரஹானே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 12ஆவது போட்டியில் பென் ஸ்டோக்ஸிற்கு பதிலாக ரஹானே இடம் பெற்றார்.
அஜின்க்யா ரஹானே
மும்பையில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை 157 ரன்கள் எடுத்தது. பின்னர், எளிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரஹானே கடும் சவாலாக விளங்கினார்.
அஜின்க்யா ரஹானே
அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். 5.3 ஓவரிலேயே சிஎஸ்கே அணிக்காக அதிவேகமாக 19 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இதுவரையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 61, 31, 37, 71 (நாட் அவுட்), 9 என்று ரன்கள் சேர்த்துள்ளார்.
அஜின்க்யா ரஹானே
கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி அணி சார்பில் ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரஹானே இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.50 லட்சத்திற்கு மட்டும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அப்படி சென்னை அணியில் அறிமுகமான ரஹானே அதிவேகமாக 200 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
அஜின்க்யா ரஹானே
ஐபிஎல் சாதனையின் மூலமாக ரஹானே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
அஜின்க்யா ரஹானே
அதன் பிறகு கிட்டத்தட்ட 17 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இது அவரது முதல் படிக்கட்டு தான். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.