Rohit Sharma, Virat Kohli: கோலி, ரோகித்திற்கு பிறகு அவர்களது இடத்தை நிரப்புக் கூடிய திறமை யாருக்கு இருக்கு?
Virat Kohli and Rohit Sharma: இந்திய அணியின் ஜாம்பவான்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வுக்குப் பிறகு, சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அவர்களது இடத்தை நிரப்புவார்கள் என்று பியூஷ் சாவ்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கில்லின் வலுவான நுட்பத்தையும், கெய்க்வாட்டின் திறமையையும் அவர் பாராட்டினார்.
Future of Indian Cricket Team
இந்திய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் போது அவர்களது இடத்தை நிரப்புக் கூடிய முழு தகுதியும், திறமையும் சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இருக்கிறது என்று லெக் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ஷுபாங்கர் மிஸ்ராவின் போட்காஸ்டில் தனது எண்ணங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட சாவ்லா, இளம் வீரர்களை சிறப்பு வீரர்கள் என்று அழைத்தார்.
Rohit and Virat Kohli
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை டிராபி வென்ற கையோடு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். தற்போது ரோகித் சர்மாவுக்கு 37 வயதாகும் நிலையில், விராட் கோலிக்கு 36 நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இது அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தை குறிக்கிறது. இந்த நிலையில், தான் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கு பிறகும் இந்திய அணியின் அவர்களது இடத்தை நிரப்பக் கூடியவர்கள் என்று சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டை சுட்டிக் காட்டி இந்திய அணியின் லெக் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லா பேசினார்.
Virat Kohli and Rohit Sharma
மேலும், கில்லிற்கு வலுவான கிரிக்கெட் நுட்பம் இருப்பதாகவும் கூறினார். சுப்மன் கில் மோசமான ஃபார்மில் இருக்கும் போது அதிலிருந்து உடனே மீண்டு வரக் கூடிய வலியையும், திறமையும் அவரிடம் இருக்கிறது. தற்போது 25 வயதாகும் கில் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் உள்பட 1,492 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று 47 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் உள்பட 2,338 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 21 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 578 ரன்கள் எடுத்துள்ளார்.
Rohit Sharma and Virat Kohli
இதே போன்று 27 வயதாகும் கெய்க்வாட், காயம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைப்பதில் தடுமாறி வருகிறார். எனினும், எதிர்காலத்தில் இந்திய அணியில் சிறப்பான ஒரு இடத்தை பிடித்து தனது திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெய்க்வாட் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 23 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 633 ரன்கள் எடுத்துள்ளார்.
கோலி மற்றும் ரோகித் இருவரும் ஓய்வை நெருங்கி வரும் நிலையில் கில் மற்றும் கெய்க்வாட் இருவரும் எதிர்காலத்திற்கு சிறந்த வீரர்களாக நம்பிக்கை அளிக்கின்றனர்.