Sachin Tendulkar:சர்ச்சைக்குரிய ரன் அவுட் –கோபத்தில் கொந்தளித்த ரசிகர்களை சமாதானப்படுத்திய சச்சின் டெண்டுல்கர்
Sachin Tendulkar, Asian Test Championship: 1999 ஆம் ஆண்டு கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்டால் ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்கள் கோபமடைந்தனர். டெண்டுல்கர் ஓடும்போது சோயிப் அக்தர் மீது மோதியதால் ரன் அவுட் ஆனார், இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. டெண்டுல்கர், டால்மியா ஆகியோர் ரசிகர்களை சமாதானப்படுத்திய பிறகு போட்டி மீண்டும் தொடங்கியது.
Sachin Tendulkar, Asian Test Championship
சர்ச்சைக்குரிய ரன் அவுட்டால் ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்கள் கோபமடைந்த நிலையில அவர்களை சச்சின் டெண்டுல்கர் சமாதானப்படுத்திய சம்பவம் 1999 ஆம் ஆண்டு நடந்துள்ளது. அது என்ன ஏன் அப்படி நடந்தது என்பது குறித்து முழுமையாக பார்க்கலாம் வாங்க.
கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான கொல்கத்தா டெஸ்ட் போட்டி வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் சர்ச்சைக்குரிய போட்டிகளில் ஒன்றாக இன்றும் இருக்கிறது. ஏனெனில் சோயப் அக்தர் சம்பந்தப்பட்ட, சச்சின் டெண்டுல்கரின் சர்ச்சைக்குரிய ரன் அவுட் தான் காரணம்.
Sachin Tendulkra, IND vs PAK, Asian Test Championship
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதின. இதில், இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் 2ஆவது இன்னிங்ஸில் 316 ரன்கள் குவித்தது.
இதன் மூலமாக பாகிஸ்தான் 278 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் 279 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்தியா விளையாடியது. ஆனால், இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. இருப்பினும், போட்டியின் 4ஆவது நாளில் ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் ஒன்று நடந்தது. அது தான் சச்சின் டெண்டுல்கரின் ரன் அவுட்.
Sachin Tendulkar, Asian Test Championship
சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது வாசிம் அக்ரம் வீசிய பந்தில் ஷாட் டீம் மிட் விக்கெட் திசையை நோக்கி அடித்து ஓடி 2 ரன்கள் எடுத்து 5000 டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்த வீரர் என்ற மகத்தான சாதனையை நிகழ்த்தினார். ஆனால், மீண்டும் 3ஆவது ரன்னிற்கு ஓடினார். எனினும், சப்ஸ்டிடியூட் வீரர் நதீம் கான் பந்தை பிடித்து ஸ்டெம்பை நோக்கி எறிய அது நேரடியாக ஸ்டெம்பை தாக்கியது.
சாதாரணமான சூழலில் சச்சின் நேரடியாக ஓடியிருந்தால் சரியாக லைனை எட்டியிருப்பார். ஆனால், 3ஆவது ரன்னிற்கு ஓடிய போது மைதானத்திற்குள் குறுக்கே வந்த சோயிப் அக்தர் மீது மோதினார். இதனால், டெண்டுல்கர் கிரீஸூக்கு வெளியில் விழுந்தார். எனினும் பந்து ஸ்டெம்பை தாக்கியதைத் தொடர்ந்து ஆன் பீல்ட் நடுவர் ஸ்டீவ் பக்னர் 3ஆவது நடுவரிடம் முறையிட்டார்.
IND vs PAK, Asian Test Championship
நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு, சச்சின் அவுட் என்று பிரான்சிஸ் அறிவித்தார். ஆனால், சோயிப் அக்தர் உடனான மோதல் தான் சச்சின் டெண்டுல்கரின் ரன் அவுட்டுக்கு காரணமாக இருந்தாலும் சச்சின் அமைதியான முறையில் வெளியேறினார். கிரிக்கெட் சட்டங்களின்படி இந்த அவுட் சட்டப்பூர்வமானது, என்றாலும் கூட, ரசிகர்களால் இந்த அவுட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாக ஈடன் கார்டனில் ரசிகர்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்றனர். மேலும், பதற்றம் நிலவியது. சிலர், மைதானத்திற்குள் பொருட்களை வீசி எறிந்தனர். இதனால், போட்டியானது தடைபட்டது. அரங்கமே பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்பு படையினர் தலையிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதோடு, நிலைமையை கட்டுப்படுத்த போலீசாரும் மைதானத்திற்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sachin Tendulkar
டெண்டுல்கரின் அவுட் ஏமாற்றத்தை மட்டுமல்ல, ரசிகர்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கை சச்சின் டெண்டுல்கர் நியாயமற்ற முறையில் ஆட்டமிழந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு நிலைமையை கட்டுப்படுத்த வேறு வழியின்றி டீ பிரேக் அறிவிக்கப்பட்டது.
நடுவர்கள் வீரர்களை மைதானத்திற்கு வெளியில் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். அதன் பிறகு மைதானத்திற்குள் வந்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஐசிசி தலைவர் ஜக்மோகன் டால்மியா ஆகியோர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் சமாதானம் செய்யப்பட்டனர். அதன் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. இந்தப் போட்டியில் இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் 232 ரன்கள் மட்டுமே எடுக்கவே 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.