#AUSvsIND நனவானது கிரிக்கெட் ரசிகர்களின் கனவு..!
First Published Nov 27, 2020, 10:33 AM IST
கொரோனாவால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியில் ஐம்பது சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் 4 மாதங்களுக்கும் மேலாக எந்தவித கிரிக்கெட் போட்டியும் நடக்காமல் இருந்த நிலையில், ஜூலை முதல் கொஞ்சம் கொஞ்சமாக போட்டிகள் நடக்க தொடங்கின. ஆனால் ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் போட்டிகள் நடத்தப்பட்டன. ஐபிஎல் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அப்படித்தான் நடத்தப்பட்டது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடந்துவரும் தொடரில் ஐம்பது சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்தவகையில், இன்று சிட்னியில் நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?