MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஆஸ்பத்திரியில் இருந்து நேராக கிரவுண்டுக்கு: பாகிஸ்தானை கதறவிட தயாராகும் அபிஷேக் சர்மா..!

ஆஸ்பத்திரியில் இருந்து நேராக கிரவுண்டுக்கு: பாகிஸ்தானை கதறவிட தயாராகும் அபிஷேக் சர்மா..!

Ind vs Pak: இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டிக்கு முன்பாக அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதால் ரசிகர்கள் கொண்டாட்டம். 

2 Min read
Author : Velmurugan s
Published : Feb 12 2026, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அபிஷேக் சர்மா பேக் டூ ஹோம்
Image Credit : Asianet News

அபிஷேக் சர்மா பேக் டூ ஹோம்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அணியின் சக வீரர் திலக் வர்மா உறுதி படுத்தி உள்ளார். புதன் கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அவர் தெளிவுபடுத்திய நிலையில் இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்..?
Image Credit : Getty

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்..?

தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் போது அபிஷேக் சர்மாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடுமையான வயிற்று வலி மற்றும் காய்ச்சல் இருந்ததால், டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியின் போதே அவர் உடல்நலம் குன்றி காணப்பட்டார். தற்போது சிகிச்சைகள் முடிவடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Related image1
T20 உலகக்கோப்பை.. அபிஷேக் சர்மா விளையாடுவதில் சிக்கல்.. இந்திய அணிக்கு பேரிடி.. என்ன நடந்தது?
Related image2
அபிஷேக் சர்மாவை தொடர்ந்து மேட்ச் வின்னரும் காயம்.. இந்திய அணி பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம்!
34
இன்றைய போட்டியில் அபிஷேக்..?
Image Credit : X

இன்றைய போட்டியில் அபிஷேக்..?

இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் தனது இரண்டாவது போட்டியை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நமீபியாவை எதிர்கொள்ள உள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள அபிஷேக் சர்மா நமீபியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் களம் இறக்கப்படுவது தொடர்பாக தற்போது வரை முடிவு எடுக்கப்படவில்லை. அவர் மீது அழுத்தம் கொடுக்க அணி நிர்வாகம் தயாராக இல்லை. போட்டி தொடங்கும் முன்பாக அவர் முழு தகுதி பெறும் பட்சத்தில் களம் இறக்கப்படலாம் என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

44
பாகிஸ்தானுக்கு எதிரான அபார சாதனை
Image Credit : Getty

பாகிஸ்தானுக்கு எதிரான அபார சாதனை

கடந்த 2025 ஆசிய கோப்பையில், பாகிஸ்தான் பவுலர்களை அபிஷேக் சர்மா சிதறடித்தது இன்னும் ரசிகர்களின் நினைவில் இருக்கிறது.

அப்போட்டியில் வெறும் 39 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார் (6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்).

பாகிஸ்தானுக்கு எதிராக பவர்பிளே ஓவர்களில் 30+ ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் ஆகியோரின் வேகத்தை அசால்ட்டாக எதிர்கொண்டு ரன் குவித்தார்.

தற்போதைய ஃபார்ம் (ICC T20 தரவரிசை)

தற்போது (பிப்ரவரி 2026 நிலவரப்படி), அபிஷேக் சர்மா சர்வதேச T20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் (No.1) உள்ளார். இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 245-க்கும் மேல் உள்ளது. இது எந்தவொரு பந்துவீச்சு அணிக்கும் நடுக்கத்தை ஏற்படுத்தும்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்தியா
இந்திய கிரிக்கெட் அணி
விளையாட்டு
டி20 உலகக் கோப்பை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலக சாதனை! பொல்லார்டையே மிஞ்சிய வைபவ்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!
Recommended image2
IPL 2022 Playoff Scenarios: பிளேஆஃப் ரேஸில் யாருக்கு இடம்? சிஎஸ்கே-க்கு வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்
Recommended image3
ICC ODI Rank: நம்பர் 1 இடத்தில் ‘கெத்து’ காட்டும் இந்தியா.. ஆஸ்திரேலியா எந்த இடம்?
Related Stories
Recommended image1
T20 உலகக்கோப்பை.. அபிஷேக் சர்மா விளையாடுவதில் சிக்கல்.. இந்திய அணிக்கு பேரிடி.. என்ன நடந்தது?
Recommended image2
அபிஷேக் சர்மாவை தொடர்ந்து மேட்ச் வின்னரும் காயம்.. இந்திய அணி பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved