MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • அபிஷேக் சர்மாவை தொடர்ந்து மேட்ச் வின்னரும் காயம்.. இந்திய அணி பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம்!

அபிஷேக் சர்மாவை தொடர்ந்து மேட்ச் வின்னரும் காயம்.. இந்திய அணி பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம்!

T20 WC 2026: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மாவை தொடர்ந்து இஷான் கிஷனும் காயமடைந்துள்ளார். நாளை நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 11 2026, 10:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டி20 உலகக் கோப்பை 2026
Image Credit : X

டி20 உலகக் கோப்பை 2026

டி20 உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டி நாளை (பிப்ரவரி 12) நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் இஷான் கிஷனின் காயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மாலை நடந்த பயிற்சியின் போது தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷனுக்கு காயம் ஏற்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் யார்க்கரை எதிர்கொண்டபோது, பந்து காலில் பட்டு கிஷன் தடுமாறி விழுந்தார்.

24
இஷான் கிஷன் காயம்
Image Credit : AFP

இஷான் கிஷன் காயம்

வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்துகொண்டிருந்த இஷான் கிஷனின் இடது கால் விரலில் பும்ராவின் பந்து பட்டது. பந்து பட்ட உடனேயே வலியால் துடித்த அவர், தரையில் அமர்ந்தார். உடனடியாக இந்திய அணியின் பிசியோ மற்றும் பயிற்சியாளர்கள் ஓடிவந்து முதலுதவி அளித்தனர். காயத்தின் தீவிரத்தை பரிசோதித்த பிறகு அவர் மீண்டும் பேட்டிங் செய்தாலும், அசௌகரியமாக காணப்பட்டது இந்தியாவுக்கு கவலையை அளிக்கிறது.

அபிஷேக் சர்மா நாளை விளையாடுவாரா?

ஏற்கெனவே இந்திய அணியில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா வயிற்று தொற்று காரணமாக சிகிச்சையில் இருப்பதால், இஷான் கிஷனும் காயம் காரணமாக விளையாட முடியாவிட்டால், அது இந்திய அணியை கடும் நெருக்கடியில் தள்ளும். 

அபிஷேக் சர்மா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், நாளைய போட்டியில் விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில்தான் இஷானும் காயமடைந்துள்ளார்.

Related Articles

Related image1
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து, இலங்கை அணிக்கு பின்னடைவு.. 2 ஆல்ரவுண்டர்கள் விலகல்!
Related image2
Jiohotstar: வெறும் 100 ரூபாய்க்கு டி20 உலகக்கோப்பை பார்த்து ரசிக்கலாம்.. ஜியோ கிரிக்கெட் பிளான்!
34
பும்ரா, வாஷிங்டன் சுந்தர்
Image Credit : AFP

பும்ரா, வாஷிங்டன் சுந்தர்

பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டிக்கு முன்னதாக, இஷான் கிஷனோ அல்லது அபிஷேக்கோ நாளை விளையாடவில்லை என்றால், சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக அணியில் இடம்பெற வாய்ப்பு அதிகரித்துள்ளது. இஷானின் காயம் அவ்வளவு தீவிரமானது அல்ல என்று முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

ஆனாலும் அவர் விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அதே வேளையில் இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக காயத்தில் இருந்து குணமடைந்த ஜஸ்பிரித் பும்ராவும், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் மீண்டும் அணியில் இடம்பெறுகின்றனர்.

44
இந்திய அணி பிளேயிங் லெவன்
Image Credit : Getty

இந்திய அணி பிளேயிங் லெவன்

நமீபயாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
T20 World Cup: 2 சூப்பர் ஓவர்.. கடைசி வரை திக் திக் திக்.. SA-விடம் போராடி வீழ்ந்த ஆப்கானிஸ்தான்!
Recommended image2
ICCயின் மிரட்டலுக்கு பயந்துட்டோமா..? எங்கள் ராணுவ தளபதி முனீர் யாருனு தெரியும்ல..? PCB தலைவர் பரபரப்பு கருத்து
Recommended image3
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து, இலங்கை அணிக்கு பின்னடைவு.. 2 ஆல்ரவுண்டர்கள் விலகல்!
Related Stories
Recommended image1
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து, இலங்கை அணிக்கு பின்னடைவு.. 2 ஆல்ரவுண்டர்கள் விலகல்!
Recommended image2
Jiohotstar: வெறும் 100 ரூபாய்க்கு டி20 உலகக்கோப்பை பார்த்து ரசிக்கலாம்.. ஜியோ கிரிக்கெட் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved