IND vs BAN: பாகிஸ்தானைப் போன்று இந்தியாவுக்கும் ஆப்பு கன்ஃபார்ம் – 150 கிமீ வேகத்தில் பந்து வீசும் நஹித் ராணா!
India vs Bangladesh 1st Test Match: பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீசிய நஹித் ராணா 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதே போன்று இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு வித்திடுவார் என்று கூறப்படுகிறது.
India vs Bangladesh Test
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் வரும் 19 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டனர். பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று வங்கதேசம் கைப்பற்றிய நிலையில் அதன் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆப்பு வச்ச வங்கதேச பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு எதிராக ஆப்பு வைக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.
Bangladesh Tour of India 2024
பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என்று கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் 21 வயதான வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா. இவர், மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணற வைத்துள்ளார். அதோடு, 2ஆவது டெஸ்ட் போட்டியில் 44 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
IND vs BAN 1st Test
பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது போன்று இந்தியாவையும் ஒயிட் வாஷ் செய்ய தயாராக இருக்கிறோம் என்று நஹித் ராணா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு நாங்கள் தயாராகிவிட்டோம். நன்றாக பயிற்சி செய்ய ஆரம்பித்தோம். இந்திய அணி மிகவும் சிறப்பாக உள்ளது. சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும் என்று கூறினார். மேலும், குறிப்பிட்ட வேகத்தை நான் அமைக்கவில்லை. நான் எந்த பவுலர்களையும் பின்பற்றவில்லை. ஆனால் எல்லோரிடமிருந்தும் நான் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
India Squad vs Bangladesh
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரித் பும்ரா, யாஷ் தயாள்.
India vs Bangladesh First Test
இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக வங்கதேசம் படைத்த அந்த 5 சாதனைகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க...
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் வெற்றி:
பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெறுவது என்பது வங்கதேச அணிக்கு இதுவே முதல் முறை.
பாகிஸ்தானில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி:
ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்டிலும் வங்கதேசம் வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தானில் தனது முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்தது.
IND vs BAN 1st Test Cricket
வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்த 10 விக்கெட்டுகள்:
பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் வெற்றியில் வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகித்தனர். இந்த தொடரில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டி இதுவரையில் இல்லாத வகையில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தனர்.
முதல் முறையாக, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பாகிஸ்தானில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் வங்கதேசம் இந்த சாதனையை படைத்தது.
Nahid Rana
முதல் முறையாக 5 விக்கெட்டுகள்:
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹமூத் தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். ராவல்பிண்டியில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஹசன் மஹ்மூத் 10.4 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதிக விக்கெட்டுகள்:
வேகத்திற்கு பெயர் போன பாகிஸ்தான் பவுலர்களை விட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றினர். ராவல்பிண்டியில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களால் இரட்டை இலக்க ஸ்கோரை கூட எட்ட முடியவில்லை.