Vastu Tips : அள்ள அள்ள குறையாம பணம் குவியனுமா? இந்த தவறுகளை மறந்தும் பண்ணிடாதீங்க!!
உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாமல் பணம் குவிய நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகளை இங்கு காணலாம்.

Vastu Mistakes To Avoid
வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்றினால் உங்கள் வீட்டில் பணப் பிரச்சனையே இருக்காது. வாஸ்துபடி, சில தவறுகளை தவிர்த்தால் பணமும், செல்வமும் குவியும். வீட்டில் எப்போதும் நிதி நிலையாக இருக்கும். அள்ள அள்ள குறையாத பணம் கிடைக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகளை இங்கு காணலாம்.
Vastu Tips For Money
வீட்டில் புனிதத்தன்மையுடன் பேண வேண்டிய திசை வடகிழக்காகும். இதில் எந்தப் பிரச்சனையும் இருக்கக் கூடாது. இங்கு ஏதேனும் சேதம் அல்லது பிரச்சனை இருந்தால் உங்களுக்கு நிதி பிரச்சனைகளும் எதிர்மறையான விஷயங்களும் நடக்கும்.
Vastu Tips
வீட்டின் நுழைவாயிலில் குப்பைத் தொட்டியை வைக்கவே கூடாது. அதிலும் மாலை வேளையில் குப்பைத் தொட்டியை வைக்க வேண்டாம். அப்படி செய்தால் மகாலட்சுமி வீட்டிற்குள் வரமாட்டாள். அந்த பாதையை குப்பைத் தொட்டி தடுக்கிறது.
Vastu Tips For Financial Growth
படுக்கையில் இருந்தபடி உண்ணக்கூடாது. இதனால் ராகு பாதிப்படையும். நிதி இழப்பு ஏற்படும். பால், தயிரை எப்போதும் தானமாக வழங்க வேண்டாம். இதனால் வாழ்வில் நிதி சிக்கல்கள் வரலாம்.
How To Attract Money With Vastu
வீட்டின் தென்கிழக்கு திசை செல்வத்தின் திசை என வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இந்த திசையில் எந்த சேதமோ, பிரச்சனையோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தடையில்லாமல் வீட்டிற்கு பணம் வந்து சேரும். மேலே சொல்லப்பட்டுள்ள வாஸ்து குறிப்புகளை சரியாக பின்பற்றினால் உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாமல் பணம் கிடைக்கும்.