- Home
- Spiritual
- Vastu Tips : இந்த திசையில் தலை வைத்து தூங்கினால்... முழுவிஷயம் தெரியாம தப்பு பண்ணாதீங்க!!
Vastu Tips : இந்த திசையில் தலை வைத்து தூங்கினால்... முழுவிஷயம் தெரியாம தப்பு பண்ணாதீங்க!!
எந்த திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது.. எந்த திசை நோக்கி தலை வைத்து தூங்கக் கூடாது என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

Vastu Tips
தூக்கம் ஓய்வு மட்டும் அல்ல; பிரபஞ்ச சக்திகளின் நீரோட்டங்களுடன் இணையவும் இன்றியமையாததாக நம்பப்படுகிறது. இதற்கு தூங்கும்போது உடலின் நிலை, தலை வைக்கும் திசை, உடல், மனம், பூமியின் காந்தப்புலத்தை ஆகியவை சமநிலையில் இருப்பது அவசியம். தூங்கும் போது தலையை தெற்கு திசையில் வைக்க வேண்டும் என நம்பப்படுகிறது. இதற்கான காரணம், எந்த திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது என இங்கு காணலாம்.
Vastu Tips
தூங்கும்போது தலை தெற்கு திசை நோக்கி இருந்தால், நமது உடல் பூமியின் காந்தப்புலத்துடன் இணைந்திருப்பதாக நம்பப்படுகிறது. ஏனென்றால் பூமியின் காந்தப்புலம் வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி இருக்கும். இப்படி படுத்தால் உடலில் உள்ள காந்தப்புலம் பாய வசதியாக இருக்கும். பதற்றம் குறையும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதய தாளங்களும் சரியாக இருக்கும்.
Vastu Tips
வாஸ்து சாஸ்திரம் மட்டுமின்றி ஆயுர்வேதமும் தெற்கில் தலைவைத்து தூங்கவே அறிவுறுத்துகிறது. வாஸ்து சாஸ்திரம்படி, தெற்கு திசையில் தலை வைத்து தூங்குவது வாழ்வில் உறுதித்தன்மை, செல்வ, செழிப்பு, நீண்ட ஆயுளைத் தரும். ஆனால் வடக்கு திசை நோக்கி தலை வைத்து தூங்கக் கூடாது.
Vastu Tips
வடக்கு திசை நோக்கி தலை வைத்து தூங்கினால் வாழ்வின்மீதே வெறுப்பு ஏற்படும். விரக்தி, தூக்கமின்மை, மன அழுத்தம் அல்லது படபடப்பு, வரலாம் என கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தை பொறுத்தவரை, தெற்கு திசைதான் பிராணனை நிலைநிறுத்த உதவுகிறதாம். நரம்பு மண்டலத்தை சமநிலையாக, அமைதியாக வைக்க உதவுகிறது. அதனால் எப்போதும் தெற்கு திசையில் தலைவைத்து தூங்குங்கள். வடக்கு திசையை தவிருங்கள்.