காலபைரவர் ஜெயந்தி: பயமா? பைரவரை வணங்குங்கள்! சிவபுராணம் சொல்லும் அதிசயம்.!
சிவபுராணத்தின் படி, பிரம்மாவின் அகந்தையை அடக்க சிவன் எடுத்த உக்கிர அவதாரமே காலபைரவர். கார்த்திகை மாத அஷ்டமியில் இவரது ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. காலபைரவர் வழிபாட்டின் மூலம் வாழ்வில் ஏற்படும் தாமதங்கள் நீங்கி பயத்தை வெல்லும் சக்தி கிடைக்கும்.

காலபைரவர் அவதார நாள்
சிவபுராணம் கூறும் அதிசய கதைகளில் ஒன்றாகும் காலபைரவர் அவதாரம். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் காலபைரவ ஜெயந்தி மிகுந்த பக்தி, விமர்சையுடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இவ்விழா நவம்பர் 12, புதன்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெறும். பக்தர்கள் காலபைரவரே காப்பாற்றும் என்று முழங்கும் காட்சிகள் அந்த நாளின் பெருமையை வெளிப்படுத்துகின்றன.
அவதாரம் எடுத்த காலபைரவர்
சிவபுராணத்தின் படி, ஒருமுறை பிரம்மதேவர் தன்னையே மும்மூர்த்திகளில் சிறந்தவர் என பெருமை கொண்டார். இதற்கு வேதங்கள் “சிவனே பரமன்” என கூறின. ஆனால் பிரம்மா அதை ஏற்கவில்லை. அப்போது ஒரு பிரகாசமான ஒளி தோன்றி, அது ஒரு உக்கிரமான உருவமாக மாறியது — அதுவே காலபைரவர்.
அசரீர குரலில் சிவபெருமான், “நீங்கள் காலத்தின் அதிபதி; உக்கிர சக்தியால் பைரவர் எனப்படும், எனவே நீங்கள் காலபைரவர் என்று கூறினார். உடனே காலபைரவர், தன் நகத்தால் பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டினார். இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது, பிரம்மாவின் தலை அவரது கையில் ஒட்டிக் கொண்டது.
தாமதமான காரியங்களை விரைவாக நிறைவேற்றும்
அந்த பாவத்திலிருந்து விடுபட காலபைரவர் காசி நகரத்துக்குச் சென்றார். அங்கே விஸ்வநாதரை தரிசித்தபோது, பிரம்மாவின் தலையம் அவரது கையிலிருந்து பிரிந்தது. இதனால் அவர் பாவத்திலிருந்து விடுபட்டார். சிவபெருமான் அவரின் பக்தியைக் கண்டு மகிழ்ந்து, அவரை காசியின் பாதுகாவலர் என நியமித்தார்.
இன்றும் காசியில் உள்ள காலபைரவர் கோவில் மிகுந்த புகழ்பெற்றது. காசிக்கு சென்றால் விஸ்வநாதரைப் பார்த்து பின் பைரவரையும் தரிசிக்காவிட்டால் யாத்திரை முழுமையடையாது என்பது நம்பிக்கை. எனவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் அந்த ஆலயத்தில் தரிசனம் செய்து வருகிறார்கள்.
காலபைரவர் வழிபாடு சாத்வீக மற்றும் தாமச முறைகளில் செய்யப்படுகிறது. அவரை வணங்குபவர்கள் காலம், கெடு, பயம் ஆகியவற்றை வெல்லும் சக்தியைப் பெறுவார்கள். “கால பைரவர்” வழிபாடு வாழ்க்கையில் தாமதமான காரியங்களை விரைவாக நிறைவேற்றும் என நம்பப்படுகிறது.